ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதைப் பற்றிச் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அவை;
* மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
* ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.
* ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்து கொண்டிருந்தால், அவர் மிக விரைவில் இறந்துவிடுவார்.
* ஒருவரின் இடது கையானது அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார்.
* இரவில் நிலவு மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார்.
* ஒருவரால் நிலவு மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாகத் தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்.
* ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார்.
* ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், அது மரணம் நிகழப் போகிறது என்பதற்கான அறிகுறி.
* ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியைக் காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் அறிகுறி.
* ஒருவரால் எதையும் சரியாகப் பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பைத் தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள்.
* ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில் அவருடைய பிரதிபலிப்பைப் பார்க்க முடியாவிட்டால், ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார்.