அட்சயதிருதி
தேனி எஸ். மாரியப்பன்
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத்தான் அட்சயதிருதி என்கிறோம். அன்று சூரியன் மேசத்தில் உச்சம் பெறுகிறார். அதே நேரத்தில் இணைந்து சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும் பொழுதுதான் அட்சயதிருதி வருகிறது.
தந்தைக்கு அதிபதி சூரியன். தாய்க்கு அதிபதி சந்திரன். எனவே அன்றைய தினம் பெற்றோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது அவசியம்.
அட்சயதிருதி பூஜை
அட்சய திருதியை அன்று லட்சுமி சமேத நாராயணனை வணங்க வேண்டும். விஷ்ணுவுக்கு துளசியுடன் "யவை" எனப்படும் கோதுமை போன்ற பொருளைப் படைக்க வேண்டும். கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களையும் படைக்கலாம். அதன் பின்பு யவையை பிராமணர்களுக்கும். ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும்.
அட்சய திருதியில் செய்ய உகந்தது.
குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், புத்தகம் வெளியிடுதல், புண்ணியத் தலங்களுக்குச் செல்தல், வீடு, மனை, கிணறு போன்றவைகளைச் சீர்திருத்தம் செய்யலாம்.
அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அது அட்சய பாத்திரத்திலிருந்து வளர்வது போல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்நாளில் வாழ்வின் திருக்காரியங்களுக்குப் பயன்படும் தங்கத்தை வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அட்சய திருதி - பன்னிரண்டு ராசிக்காரர்கள்
அட்சய திருதி அன்று பன்னிரண்டு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள், வாங்க வேண்டிய பொருட்கள் செய்ய வேண்டிய செயல்கள் போன்றவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மேஷம் - விநாயகர், சுப்பிரமணியர் - தங்கம் வெள்ளி வாங்குதல் - பூமி சம்பந்தப்பட்ட புது முயற்சி.
ரிஷபம் - சாந்தரூப அம்பிகை - தங்கம் வெள்ளி வாங்குதல் - கட்டிடப்பணி தொடர்தல்.
மிதுனம் - விஷ்ணு, மகாலட்சுமி - தங்கம் வெள்ளி வாங்குதல் - பொது நலத்தில் ஈடுபடுதல்.
கடகம் - அம்பிகை - தங்கம் வெள்ளி வாங்குதல் - அரசியல் ஈடுபாடு.
சிம்மம் - சிவபெருமான் - தங்கம் வெள்ளி வாங்குதல் - புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடல்.
கன்னி - விஷ்ணு, மகாலட்சுமி - தங்கம் வெள்ளி வாங்குதல் - எழுத்துத்துறை, பத்திரிகைத்துறை ஈடுபாடு.
துலாம் - துர்க்கை, அம்பிகை - தங்கம் வெள்ளி வாங்குதல் - நூதனப்பொருள், வியாபார சம்பந்தம்.
விருச்சிகம் - கற்பக விநாயகர், முருகன் - தங்கம் வெள்ளி வாங்குதல் - எழுத்துத்துறை, பத்திரிகைத்துறை ஈடுபாடு.
தனுசு - தட்சிணாமூர்த்தி - தங்கம் வெள்ளி வாங்குதல் - வெளிநாட்டுத் தொடர்பு.
மகரம் - விநாயகர், அனுமன் - தங்கம் வெள்ளி வாங்குதல் - பொதுநல ஈடுபாடு
கும்பம் - சனீஸ்வரன், அனுமன் - தங்கம் வெள்ளி வாங்குதல் - இரும்பு, எந்திரம், மருந்து சம்பந்தப்பட்ட தொழில்.
மீனம் - தென்முகக்கடவுள், நந்தீஸ்வரர் - தங்கம் வெள்ளி வாங்குதல் - பேப்பர், பால், தண்ணீர் மற்றும் புது வியாபாரம்.


இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.