இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் பதினொன்றாம் நாளில் குறைவடையும். மூன்றாம் பாதமாகில் பதினெட்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தியாறாவது நாளில் குணமாகும்.
“ரேவதியின் சுரமுதற்கால் மரிப்பதாகும்
மிரண்டாங்கால் பதினோரா நாளே தீரு
மாதியேமூன் றாங்கால்பதி னெட்டில்தானும்
வருசுரம்நாற் காலதுவே இருபத்தாறில்
பூபதிசே ரனுகூல மடையுங்கண்டீர்
புகல்சுர நுால் கண்டிகை புகலக்கேண்மின்
தாபதிசே ருமைகேட்க வானே சொன்ன
சாஸ்திரத்தை உரைப்பவர்கேள் தப்பாதென்றே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (அகத்தியர் இரண்டாயிரம் - மூன்றாம் பாகம், பதிப்பாசிரியர் டாக்டர் எஸ்.வெங்கடராஜன், பக்கங்கள், 507 - 519.)
மேற்காணும் 27 நட்சத்திரங்களின் பாதங்களில் சுரம் ஏற்பட்டால் மருந்தில்லாமல் விளையும் பயன்கள் குறித்த அட்டவணையைக் கீழே காணலாம்.
| நட்சத்திரங்கள் |
முதல் பாதம் |
இரண்டாம் பாதம் |
மூன்றாம் பாதம் |
நான்காம் பாதம் |
| அசுவினி |
9 நாட்கள் |
10 நாட்கள் |
15 நாட்கள் |
மரணம் |
| பரணி |
3 நாட்கள் |
7 நாட்கள் |
15 நாட்கள் |
32 நாட்கள் |
| கார்த்திகை |
9 நாட்கள் |
9 நாட்கள் |
15 நாட்கள் |
18 நாட்கள் |
| ரோகிணி |
மரணம் |
18 நாட்கள் |
22 நாட்கள் |
60 நாட்கள் |
| மிருகசீரிடம் |
30 நாட்கள் |
8 நாட்கள் |
20நாட்கள் |
25 நாட்கள் |
| திருவாதிரை |
----- |
----- |
----- |
----- |
| புனர்பூசம் |
7 நாட்கள் |
19 நாட்கள் |
15 நாட்கள் |
மரணம் |
| பூசம் |
7 நாட்கள் |
12 நாட்கள் |
19 நாட்கள் |
27 நாட்கள் |
| ஆயில்யம் |
9 நாட்கள் |
20 நாட்கள் |
20 நாட்கள் |
36 நாட்கள் |
| ஆயில்யம் |
9 நாட்கள் |
20 நாட்கள் |
20 நாட்கள் |
36 நாட்கள் |
| மகம் |
மரணம் |
20 நாட்கள் |
85 நாட்கள் |
5 நாட்கள் |
| பூரம் |
மரணம் |
25 நாட்கள் |
36 நாட்கள் |
81 நாட்கள் |
| உத்ரம் |
8 நாட்கள் |
20 நாட்கள் |
52 நாட்கள் |
மரணம் |
| அஸ்தம் |
8 மாதம் |
25 நாட்கள் |
28 நாட்கள் |
52 நாட்கள் |
| சித்திரை |
9 நாட்கள் |
15 நாட்கள் |
42 நாட்கள் |
49 நாட்கள் |
| சுவாதி |
12 நாட்கள் |
மரணம் |
48 நாட்கள் |
12 நாட்கள் |
| விசாகம் |
----- |
----- |
----- |
----- |
| அனுடம் |
மரணம் |
60 நாட்கள் |
90 நாட்கள் |
22 நாட்கள் |
| கேட்டை |
மரணம் |
20 நாட்கள் |
31 நாட்கள் |
82 நாட்கள் |
| மூலம் |
மரணம் |
3 நாட்கள் |
10 நாட்கள் |
7 நாட்கள் |
| பூராடம் |
9 நாட்கள் |
மரணம் |
10 நாட்கள் |
5 நாட்கள் |
| உத்திராடம் |
7 நாட்கள் |
20 நாட்கள் |
30 நாட்கள் |
42 நாட்கள் |
| திருவோணம் |
11 நாட்கள் |
10 நாட்கள் |
8 நாட்கள் |
மரணம் |
| அவிட்டம் |
8 நாட்கள் |
15 நாட்கள் |
22 நாட்கள் |
29 நாட்கள் |
| சதயம் |
11நாட்கள் |
11 நாட்கள் |
15 நாட்கள் |
22 நாட்கள் |
| பூரட்டாதி |
மரணம் |
16 நாட்கள் |
71 நாட்கள் |
41 நாட்கள் |
| உத்திரட்டாதி |
7 நாட்கள் |
18 நாட்கள் |
7 நாட்கள் |
மரணம் |
| ரேவதி |
மரணம் |
11 நாட்கள் |
18 நாட்கள் |
26 நாட்கள் |
மரணம் தரும் நட்சத்திரப் பாதங்கள்
அசுவினி 4, ரோகிணி 1, புனர்பூசம் 4, மகம் 1, பூரம் 1, உத்ரம் 4, சுவாதி 2, அனுடம் 1, கேட்டை 1, மூலம் 1, பூராடம் 2, திருவோணம் 4, பூரட்டாதி1, உத்திரட்டாதி 4, ரேவதி 1 ஆகியவை என்பதை நாம் அறியலாம்.
இவ்விதமாக அசுவதி முதல் ரேவதி முடிய உள்ள (திருவாதிரை, விசாகம் தவிர) 25 நட்சத்திரங்கட்கும் - பாதங்களின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவருக்கும் சுரம் - ஏற்பட்டால் மருந்தில்லாமல் தானாகவே தீரும் முறை இந்நூலினுள் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவை யாவும் இப்பகுதியினுள் பாடல்கள், பொருள்களாக இடம் பெற்றுள்ளன. சித்த மருத்துவ நூல்கள் பலவும் சோதிட நட்சத்திர அடிப்படையில் மருந்து கொடுத்துள்ள முறையினை பல நூல்களும் ஆதாரம் தெரிவிக்கின்றன.
துணை நின்ற நுால்
அகத்தியர் இரண்டாயிரம் - மூன்றாம் பாகம், பதிப்பாசிரியர் டாக்டர் எஸ்.வெங்கடராஜன், சரசுவதி மகால் நுாலகம், தஞ்சாவூர் 613009. (இரண்டாம்பதிப்பு, 1981)
நிறைவுற்றது
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.