இருபத்தியேழு நட்சத்திரங்களில் சுரம் ஏற்பட்டால் மருந்து இல்லாமல் அவற்றின் பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
தொடர்ச்சி... (2)
ஆயில்யம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பதாவது நாளில் தீரும். இரண்டாம் பாதத்தில் இருபது நாட்கள் இருக்கும். மூன்றாம் பாதமாகில் இருபது நாட்கள் சென்று குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஒரு மாதம், ஆறு நாட்கள் சென்ற பின்பு தான் குணமாகும்.
“ஆயில்ய முதற்சுரமே யொன்பதானா ளடுத்திரண்டு மிருபதுநா ளாகுமென்ப
மேகியமூன் றருபதுநாள் சுத்தமாகும் மேவுகால் நாலுக்கு மெய்யே சொன்னோம்
தோகையே சொல் மாதமொன்று நாளுமாறு சொல்லு நாளிதுசுகமே சுத்தமென்க
ஆகமுடன் சொல்லியது சுரத்தின்மாலை யடவிதனை யறிந்தறிந்து ஆய்ந்துகொள்ளே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
மகம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஆயுளைப் போக்கும். இரண்டாம் பாதத்தில் இருபது நாட்கள் இருக்கும். மூன்றாம் பாதமாகில் எண்பத்தைந்து நாட்கள் சென்ற பின் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஐந்தாவது நாள் தீரும்.
“மகத்திடையீர் முதற்காலே மரிக்குமிரண்டா வதுதானே யிருபதுநாள் வாறுமென்க
இகத்துடையீர் கால்மூன்றுக் கெண்பத்தஞ்சு தினமானால் விடுக்கும் நாலுதானே
சுகத்துடனே அஞ்சானாள் சுத்தமாகும் சொல்லுமென முந்நுாலின் தொகுதிகாண்க
முகத்துடையீர் வதனமலர் மாதேகண்ட முறையில்வரு மறையிலிது முயன்றநாளே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
பூரம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் இருபத்தைந்தாவது நாள் தீரும். மூன்றாம் பாதமாகில் முப்பத்தாறாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் எண்பத்தொன்று நாட்கள் சென்ற பின் தான் குணமாகும்.
“பூரமதில் வெப்புதிக்கில்முத்தக்கால் சாவாம்
பொறுத்திரண்டு மிருபத்தஞ்சுநாளே செல்லுந்
தீரமுள்ள மூன்றேகால் முப்பத்தாறு
தினமாகிவிடுமிதனைத் தேர்ந்து கொள்க
பாரமுட னாலாங்கா லெண்பத்தொன்று
பத்தியநோ யதுதீரும் படியே சொன்னோம்
நாரணியாள் கேட்டருள அரனே சொல்ல
நட்சத்திர ரமாலை நாடுங்காலே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
உத்திரம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் எட்டாவது நாளில் தீரும். இரண்டாம் பாதத்தில் இருபதாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் ஐம்பத்திரண்டாவது நாள் தீரும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நோயாளியைக் கொல்லும்.
“உத்திரநாள் முதற்பாதம் நாளெட்டாகும்
முடனிரண்டு இருபதுநாள் செல்லுமென்க
அத்திரமே மூன்றேகா லன்பதாகு
மதனொடு நாளிரண்டு மானதேகாண்
குத்திரமா நாலாங்கால் குணமேயில்லை
சொல்லுமிது சுரமீறில் கோதையகே
ளத்தனுரை செய்திடவே உமையாள்கேட்ட
யாயுள்மறை யின்பயனை யறிவதாமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
அஸ்தம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் தீர எட்டு மாதங்களாகும். இரண்டாம் பாதத்தில் இருபத்தைந்தாம் நாள் தீரும். மூன்றாம் பாதமாகில் இருபத்தெட்டு நாட்கள் சென்ற பின் தான் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஐம்பத்திரண்டு நாட்கள் ஆகும்.
“அத்தத்தில் தோன்றுசுர முதற்காலெட்டு
மாசசெல்லு மிருபதாமஞ் சேனாளுகுஞ்
சுத்தமுள்ள மூன்றாங்கா லிருபத்தெட்டு
செல்லுகுண மாமீது சுரமேநல்ல
நற்றநிழால் நாலாங்கா லன்பத்திரண்டு
நாட்சென்று விட்டுவிடும் நாரிகேளாய்
சுத்தமு டனுரைத்த சுர நுால்மாலை
சொல்லியநாள் முறைமீறாத் தொகுதியாமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
சித்திரை நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் அது ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினைந்து நாட்களாகும். மூன்றாம் பாதமாகில் நாற்பத்திரண்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நாற்பத்தியொன்பது நாளில் தான் தீரும்.
“சித்திரைசேர் பாதமுத லொன்பதேநாட்
சொல்லுமிரு காலுக்குப் பதினைந்தாகும்
பத்தியுடன் மூன்றேநாற் பத்திரண்டு
பண்புடனே சொல்லுநாள் பார்த்துச் செல்லி
மெத்தநலம் நாலாங்கால் நாற்பத்தொன்
பதுமீ றாறுகுண முண்டாய்விடு
மெய்யெனவேற் கணமாதே கேளாயென்று
விமலருரை சுரநுாலின் வேதமாமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
சுவாதி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் பன்னிரண்டாவது நாள் தீரும். இரண்டாம் பாதத்தில் அது பிணியாளியைக் கொன்று விடும். மூன்றாம் பாதமாகில் நாற்பத்தெட்டு நாட்கள் சென்ற பின் தான் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் பன்னிரண்டாவது நாளில் தீரும்.
”சோதிநாட் முதற்பாதம் பனிரண்டே
நாட்சொல்லு மிருகால்மரிக்குமென்க
மேதினியில் முப்பதாம் பதினெட்டேநாள்
விடுசுரமே தப்பாது விளம்பினோம்காண்
ஆதியே நாலாங்கால் பனிரண்டேநா
ளாறிவிடு வெப்பகலு மாதலால் நீ
நீதிசே ருமைதானே உரைத்தநாளே
நெறியுடனே சேர்ந்தறிந்த நீதிதானே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
அனுடம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளி இறப்பான். இரண்டாம் பாதத்தில் இரண்டாவது மாதம் தீரும். மூன்றாம் பாதமாகில் தொண்ணுாறு நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்திரண்டாவது நாளில் தீரும்.
கேட்டை நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளி இறப்பான். இரண்டாம் பாதத்தில் இருபதாவது நாளில் தீரும். மூன்றாம் பாதமாகில் முப்பத்தொன்றாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் எண்பத்தியிரண்டாவது நாளில் தீரும்.
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
”அனுடமுதற் கால்மரிக்கு மிரண்டிருமதாகு
மன்புடனே மூன்றாங்கால் தொண்ணுாறாறு
மனுவுடையீர் சதுர்பாத மிருபத்திரண்டு
மறுமே சுரமதுவு மானே கேளாய்
தனுவான கேட்டைமு தற்கால்சாவாம்
தனித்திரண்டு மிருபதுநாட் சாந்தமாகும்
பனுவாலாய மூன்றாங்கால் முப்பத்தொன்று
பார்நாலு காலெண்பத் திரண்டு மென்பதாமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
மூலம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் மூன்று நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் பத்தாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஏழாவது நாளில் குறையும்.
பூராடம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் நோயாளியை மரிக்கச் செய்யும். மூன்றாம் பாதமாகில் பத்தாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஐந்தாவது நாளில் தீரும்.
“மூலமுதற் கால்மரிக்கு மிரண்டாம்பாத
மூன்றுநா ளில்விடு மூன்றாங்காலே
நானாட்பத் துசெல்லு நாலாம்பாதம்
சத்தகமா னாட்சென்று சாந்தமாகு
மால்விழியாய்ப் பூராட மாகியநாள்
முற்பக்க மொன்பதாகுங்
கால்மரிக்கு கொல்விரண்டாங் மூன்று கூறியநாள்
பத்தில்விடும் நாலாங்கா லஞ்சுசென்றே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
உத்திராடம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஏழு நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் இருபதாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் முப்பதாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நாற்பத்தியிரண்டாவது நாளில் தீரும்.
திருவோணம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் பதினோறாம் நாள் தீரும். இரண்டாம் பாதத்தில் பத்தாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் எட்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஆயுளைப் போக்கும்.
“உத்திராட முதற்கால்சத் தனாளா முதித்திரண்டு
மிருபதுநாள் மூன்றுமுப்பதே சொல்லும்
பத்தியிராய் நாலுக்கு நாற்பத்தி ரண்டுபாங்
காகுந்திரு வோணம்முதற் கால்பதினோர்நாள்
சுத்தியிரா யிருகாலில் பத்தே செல்லும்
சொல் மூன்றாங் காலுக்கு எட்டேசொன்னாய்
மெத்தீராய் நாலாங்கால் மரிப்பதாகும்
மெய்நுாலின் படியிதனை விளம்புவோமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
அவிட்டம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினைந்தாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் இருபத்தியிரண்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தியொன்பது நாளில் தீரும்.
சதயம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம் ஆக இரண்டிலும் சுரம் ஏற்பட்டால் பதினொன்றாம் நாளில் தீரும். மூன்றாம் பாதமாகில் பதினைந்தாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தியிரண்டாவது நாளில் தீரும்.
“நீலமவிட் முதற்சுரநா ளொன்பதாகும்
நேரிருகால் பதினஞ்சு மூன்றாங்காலே
விதப்படியே மிருபதுவு மிரண்டுநாளே
மீறாதே நாலாங்கா லிருபத்தொன்பதேகேள்
பதத்துடைய சதையமுதற் பதினொன்றேசொல்
பலமிரண்டிற் பதினொன்றா நாளதாகும்
மிதப்படியே மூன்றுமேவே ழெட்டேசெல்லு
மீறாது நாலுங்காலிருபத்து ரெண்டுமாமே.
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
பூரட்டாதி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் பதினாறு நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் எழுபத்தொன்றாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நாற்பத்தியொன்றாம் நாளில் தீரும்.
உத்திரட்டாதி நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஏழு நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினெட்டாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் ஏழாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நோயாளி பிழைக்க மாட்டான்.
“பூரட்டா திமுதற்கால் மரிப்பதாகும்
பொருந்திருகால் பதினாறில் தீரும்
நேரிட்ட மூன்றுக்கெழு பத்தோர் நாளாகிற்
செயமே நாற்கால் நாற்பத்தொன் றேதீருஞ்
சீரிட்ட உத்திரட்டாதி முதற்காலேழில்
செல்லுமிரு கால்பதினெட் டில்தானாகும்
சேரிட்ட திரிவிதக்கா லேழில் தீர்ந்து
செல்லும்நாற் கால்மரிப்ப தென்றுநுாலே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
தொடரும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.