தம்பதியர்களில் ஆண் பிறந்த நட்சத்திரங்களுக்கேற்பத் தானம், தர்மம் செய்திட வேண்டுமென்றும், பெண் அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமுமளித்துச் செயல்பட்டால், பெண் தீர்க்க சுமங்கலியாக நீண்ட காலம் வாழ்வர் என்றும், இருவருக்கும் மறுபிறவியற்ற நிலை கிடைக்குமென்றும் சொல்கின்றனர். அத்ரி மகரிஷி மற்றும் அனுசுயா தேவி ஆகியோர் இறைவனிடம் வேண்டிப் பெற்ற இந்த வரத்தின் படி ஆண், பெண் செய்ய வேண்டியவை குறித்த அட்டவணை இது.
நட்சத்திரம் |
ஆண் |
பெண் |
அஸ்வினி |
மஞ்சள் சாதம் |
மஞ்சள் அரைத்து ஏதேனும் ஒரு கோயிலுக்கு அளித்தல் |
பரணி |
நெல்லி பொடி |
கணபதி கோயிலில் அரைத்த சந்தனம் அளித்தல் |
கார்த்திகை |
வற்றல் குழம்பு |
முருகன் கோயிலில் பழங்கள் அளித்தல் |
ரோகிணி |
தயிர் |
அம்மன் கோயிலில் பால் தானம் செய்தல் |
மிருகசீரிஷம் |
பருப்பு |
பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை அளித்தல் |
திருவாதிரை |
களி, கூழ் |
சிவன் கோயிலில் குங்குமம் அளித்தல் |
புனர்பூசம் |
பால் சாதம் |
கிருஷ்ணன் கோயிலுக்குத் திருவிளக்கு, மூங்கில்கள் அளித்தல் |
பூசம் |
சாம்பார் சாதம் |
அரசமர நாகமிருக்கும் கோயிலில் பால் அளித்தல் |
ஆயில்யம் |
மோர்/வத்தல் குழம்பு |
வன்னி விநாயகர் கோயிலில் மோதகம் அளித்தல் |
மகம் |
கீரை |
ஆலமர விநாயகர் கோயிலில் கொழுக்கட்டை அளித்தல் |
பூரம் |
பலாப்பழ இனிப்பு சாதம் |
முருகன் கோயிலில் பஞ்சாமிருதம் அளித்தல் |
உத்திரம் |
புளியோதரை |
வைத்தீஸ்வரன் கோயிலில் கலவை சாதம் அளித்தல் |
ஹஸ்தம் |
தேங்காய் சாதம் |
மூலவருக்கு மல்லிகைப்பூ தானம் (ஏதாவது கோயிலில்) |
சித்திரை |
சர்க்கரைப் பொங்கல் |
சிவன் கோயிலில் வில்வ மாலை அளித்தல் |
சுவாதி |
பருப்புப் பொடி சாதம் |
அம்மன் கோயிலில் முல்லை மாலை அளித்தல் |
விசாகம் |
கருவேப்பிலைப் பொடி சாதம் |
கணபதி கோயிலில் விளாம்பழம், வெல்லம் சேர்த்து அளித்தல் |
அனுஷம் |
வெண்பொங்கல் |
சிவன் கோயிலில் மகிழம்பூ அளித்தல் |
கேட்டை |
மாங்காய் சாதம் |
சிவன் கோயிலில் தாமரைப்பூ அளித்தல் |
மூலம் |
அதிரசம் |
பெருமாள் கோயிலில் தோசை அளித்தல் |
பூராடம் |
போளி |
காலபைரவர் கோயிலில் உருளைக் கிழங்கு சாதம் அளித்தல் |
உத்திராடம் |
கடலை மாவு |
எல்லை தேவதைக்கு இளநீர் அளித்தல் |
திருவோணம் |
அரிசிமாவு, கேசரி |
எருக்குப் பூ மாலை பிள்ளையார் கோயிலில் அளித்தல் |
அவிட்டம் |
அவல் |
வன்னி மாலை பிள்ளையார் கோயிலில் அளித்தல் |
சதயம் |
சேவை |
ஹயக்ரீவர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் அளித்தல் |
பூரட்டாதி |
புட்டு |
முருகன் கோயிலில் தேன், தினை மாவு அளித்தல் |
உத்திரட்டாதி |
உளுந்து பட்சணம் |
கோயிலில் பசுவிற்குக் கீரை, பழம் அளித்தல் |
ரேவதி |
கொத்துமல்லி துவையல் சாதம் |
அம்மன் கோயிலில் அடிப்பிரதக்ஷணம் செய்து
இனிப்பு தானம் அளித்தல் |