வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது சரியா?
மகரிஷி சீடன்
இன்று புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி, வாஸ்து பார்க்கும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் இப்படி வாஸ்து பார்ப்பது சரியா? வாஸ்துப்படி வீடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா?
வாஸ்து என்றால் என்ன?
வாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.
வாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான்.
வாசகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு.
மனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம்.
வாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை.
கோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா? ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.
மனைக்குரிய விதிகள் வாஸ்துவுடன் ஒத்து வருமா? கோள்கள் மனிதனை எவ்வாறு இயக்குகின்றன? எப்படி வீடு வாய்ப்பு அமையும். எட்டு திசைகளை எப்படி பார்ப்பது? இந்த பிரபஞ்சம் உள்ளவரை என்றும் மாறாத திசைகள் பின்வரும் படத்தில் உள்ளது.

இதில் சந்திரன் - உடல், சூரியன் - ஆன்மா. இவர்கள் தெற்கு நோக்கி இருந்து மனிதர்களை இயக்குகிறார்கள்.
வடக்கு - சுபிட்சம், குபேரன் - தெற்கு என்பது மனிதர்கள். மனிதர்கள் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்தால் சுபிட்சத்திற்குக் குறை இருக்காது. காரணம் என்ன? அங்கே நேர் எதிரே குபேரன் சுபராக இருந்து சுபதன்மை பெறுகிறார்கள்.
தெற்கு - எமதர்மராஜன்
உடல் - சந்திரன்
ஆன்மா - சூரியன்
இதில் எடுத்துச் செல்லும் ஆற்றல் எமதர்ம ராஜனுக்கு உண்டு. அதாவது தர்மத்தை நிலை நாட்டும் ஆற்றல் எமதர்மனுக்கே இருக்கிறது. மனிதர்களின் உள்ளே ஆன்மா புகுந்து கொண்டு எமதர்மரஜனை அதிகாரியாகக் கொண்டு விளையாடுகிறது.
வடக்கு குபேரன் (சனி பகவான் வீடு). இங்கு ஏன் சனியைக் கொடுத்தார்கள்?. நீ குபேரனாக வேண்டுமானால் சனியைப் போல் உழைக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் முன்னேற்றமடைய சனி பகவான் போல் உழைக்க, கர்மா நன்றாக இருக்க வேண்டும்.
கிழக்கு= இந்திரன், மேற்கு = வருணன்
அதாவது மனிதர்களின் இருபுறமும் இந்திரன், வருணன். எதிரே குபேரன். நமக்கு மேலே அக்னி, நமக்குக் கீழே நிருதி

மேல் அக்கினி. கீழ் நிருதி.- நிருதி என்பது இருண்ட சூழ்நிலை (கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல்). இந்த இடத்தில் ஆண்-பெண் உடல் உறவு கொள்ளக் கூடாது. இங்கு அக்கினியில் உடல் உறவு கொள்ளக் கூடாது.
தென்மேற்கு நிருதி - இங்கு கர்பாதானம் கூடாது. இருண்ட சூழ்நிலை. பிறக்கும் குழந்தைகளுக்குத் துன்பம் நேரிடும்.

1. கன்னி மூலை - இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். வீட்டின் கன்னி மூலையில் அடைப்பு வேண்டும். திறப்பு கூடாது. தப்பு மற்றும் துவேசம் ஏற்படும்.
2. நிருதி (மீனம்) - அசுத்தம் கூடாது. கழிவு சேமிப்புக் குழி (செப்டிக் டேங்க்) அமைக்கக் கூடாது. இங்கு வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள் எதுவும் நிகழாது.
3. வாயு (தனுசு) - இப்பகுதி திறந்து இருக்க வேண்டும். காற்று வந்து போக வேண்டும். கழிவுகளை வைக்க வேண்டும். தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
4. வடக்கு (மகரம்- கும்பம்) - வடக்கும், கிழக்கும் எப்பொழுதும் சுமை இல்லாமல் இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இப்பகுதியில் இருந்தால் ஏதோ மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
5. அக்னி மூலை (மிதுனம்) - வாயுவிலிருந்து அக்னி மூலைக்கு காற்று போக வேண்டும். அதே போல கன்னியில் இருந்து ஈசானம் போக வேண்டும். இந்த அக்னி வாயு மூலை இணையுமிடத்தில் படுக்கை அறை இருக்க வேண்டும்.
6. வடமேற்கு (வாயு) [தனுசு] முதல் தென்மேற்கு (அக்னி) [மிதுனம்] - இங்கு காற்று தள்ள வேண்டும். காற்றின் வேகம் கர்ப்பாதானதிற்குத் தள்ள வேண்டும் விந்துவை.தவசு என்ற வில் மைதூனம் (மிதுனம்) என்ற ராசிக்குக் கடக்கிறது. தனுசு மன்மதன் அதில்தான் குருவைக் கொடுத்து இருக்கிறார்கள். தனுசு (குரு) முதல் மிதுனம் (புதன்) ஆகிறது. இது கற்பனையல்ல. பொதுவாக தனுசுவிலேதான் பூலோக நட்சத்திரம் மூலம் இருக்கிறது. தனுசுவில் 3 டிகிரி அதாவது பாலியை வீதிகளுக்கான புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. மூலம் இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தனுசு ராசியின் அமைப்பு.
அக்னியில் அடுப்பு
அக்னியில் ஏன் அடுப்பு வைக்க வேண்டும் என்கிறோம்?
இந்திரன் எமதர்மராஜன் இரண்டுக்கும் நடுவில் அக்னி. ஏன்? இந்திரனுக்கு நேர் சமநிலையுடையவர்களுக்கு வருணன். வருணன் அனைத்து இடத்திலும் இவருடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. இந்த நிலைகள் எல்லாம் நிர்ந்தரமானது. இவைகளில் எக்காலத்திலும் மாறுதல்களில்லை.
வாஸ்து புருஷன்
வாஸ்து புருஷன் ஈசானத்தில் தலை வைத்து நிருதியில் கால் நீட்டி அக்னியில் இடது கையை வைத்து வாயுவில் வலது கையை வைத்துப் படுத்து இருக்கிறார்.
வாஸ்து புருஷன் தலை வைக்கும் இடத்தில் நாம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன்? ஈசானியம் என்பது முக்தியும் மோட்சமும் தரக்கூடிய இடம். அங்கு உன்னுடைய ஐம்புலன்களையும் அடகு வைக்க வேண்டும். எல்லாவிதமான முக்தி மோட்சத்திற்கும் இறை சிந்தனை வேண்டும்.
கன்னியில் கால் ஏன்? ஞானிகளையும், பெரியவர்களையும் கன்னியில் நிறுத்திப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.
வலது கை வாயு - அக்னி வாயு
இடது கை அக்னி - வாயு அக்னி
இதனால்தான் இடது கை பலம் குறைகிறது. வலது கை (வாயு) காற்று பலம் அதிகம்.
எப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வாயுவை வணங்க வேண்டும். அருனள் தன்மை வாயுவுக்கு மட்டுமே உண்டு.
சிரசு - ஈசான்யம்
வலது கை - வாயு மூலை
இடது கை - அக்னி மூலை
இந்தத் தகவல்கள் விக்கிரமாதித்தன் வாஸ்து சாஸ்திரச் சுவடியில் உள்ளது. இந்த சாஸ்திரப்படிதான் விக்கிரமாதித்த மன்னைன் தன் சிம்மாசனத்திற்குப் படிகளை அமைத்தான் என்று சொல்வதுண்டு.
வாஸ்து புருஷ லட்சணம் என்பது இதுதான். இதன்படி நாம் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். சில இடங்களில் சில பொருட்களை வைத்தால் அதற்கான தனி அதிர்வுகள் நிலை மாறும்.
அக்னி மூலை - இந்த மூலையில் விளக்கு எரிந்து கொண்டே இருதால் எவ்விதத் துன்பமும் துயரமும் வராது. தொழில் நிறுவனங்களில் இங்கு மின்சாதனப் பொருட்கள், இணைப்புகள் இருக்க வேண்டும்.
ஈசான்யம் - மண் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். இதைத் தவிர்த்து மீன் தொட்டி வைக்கக் கூடாது. இனவிருத்திப் பொருட்களை இங்கு வைத்தல் சரியல்ல.
எமதர்மராஜன் - இங்கு மனிதன் தர்மம் உயர்ந்து மேலோங்க வேண்டும். தர்மம் அதிகரிக்க அதிகரிக்க குபேரன் (வடக்கு) தலை வணங்கிக் கொடுப்பார்.
மேற்கு உயர்வாகவும், கிழக்கு தாழ்வாகவும் வேண்டும் என்பார்கள் ஏன் தெரியுமா? வருணன் அருள் ஏற ஏற தானாகவே சில விஷயங்கள் கட்டுக்குள் வந்துவிடும். இப்படி அமைந்த வீடுகளில் நடைமுறையில் பார்வைக்கு ஆடம்பரம் இருக்காது. மாறி இருந்தால் எத்தனை லட்சங்கள் வந்தாலும் பற்றாக்குறை நிலவும். இதுபோல் பல ரகசியங்கள் இதில் உள்ளன.
திசை அமைவு கோள்கள் வழிமுறை

1. திசைகள் எந்தச் சூழ்நிலையிலும் பார்க்க கால புருஷத் தத்துவப்படி (ராசிப்படி) இது மாறாது.
2. திசையில் ஆட்சி செலுத்தும் கோள்கள் நிலைகள் கால புருஷத் தத்துவப்படி;
உதாரணமாக;
ஒருவரின் தர்மாதிபதி (9 ஆம் பாகத்தில்) கர்மத்தில் இருப்பின் தர்மத்தைக் காமத்தின் மூலமாக செயல்படுத்தி தனக்குத்தானே அழிவு ஏற்படுத்திக் கொள்வார். தர்ம காரியம் இவர் ஏதோ செய்ய என் பெயர் பெரிதாக இருக்க வேண்டும், புகைப்படம் பெரிய அளவில் வர வேண்டும், முதல் மரியாதை வேண்டும் என்கிறதான ஆசைகளுடன் செயல்படுகிறது. தர்மம் கர்மாவாக செயல்படுகிறது.
கர்மம் தர்மமாகச் செயல்படுதல்
இவரின் கர்மாதிபதி தர்மத்திக் இருந்தால் எந்த பேரும் வேண்டாம். பிரதிபலன் வேண்டாம். நல்லவிதமாக தர்ம காரியம் செய் என்பார். இப்படித்தான் பார்க்க வேண்டும். இதுபோலத்தான் நிலையாக இருக்கும் திசை அமைப்பு மனிதனின் பாவ புண்ணியங்களுக்கேற்ப மாறி செயல்படுகிறது. இருவரின் கர்மாதிபதி தர்மத்திலிருந்தால் எந்த பேரும் வேண்டாம், பிரதி பலன் வேண்டி நல்ல விதமாக தர்ம காரியம் செய் என்பர். கர்மம் தர்மமாக இருந்து செயல்படுகிறது.
இப்படித்தான் பார்க்க வேண்டு. இது போலத்தான் நிலையாக இருக்கும் திசை அமைப்பு மனிதனின் பாவ புண்ணியங்களுக்கேற்ப மாறி செயல்படுகிறது.
அக்னி பாகத்தில்தான் சமையலறை இருக்க வேண்டும். ஜாதகரின் கர்மாவிற்கு ஏற்றவாறு திசைகள் மாற்றமாகலாம். பிறப்பின் தன்மைக்கு ஏற்றபடியும் திஅசைகள் மாறுபட்டு செயல்படும்.

மேலே காணும் ஒருவருடைய ஜாதகத்தில் உதய லக்கினம் கன்னி. உதயம் என்றாலே கிழக்குதான். அஸ்தமனம் மேற்கில் ஏழாம் வீடு. இங்கு தென்மேற்கு திசை கிழக்காக மாறிச் செயல்படுகிறது. கிரகங்கள் ராசியில் எங்கு உள்ளார்களோ அங்கு அந்த ராசிப்படியான பலன்களைத் தருவார்கள். நம் பிறப்பிற்கேற்ப நம் இல்லத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வீடு நம் பிறப்பிற்கேற்ப ஒத்திருந்தால் அந்த வீடு நம்மை ஏற்றுக் கொள்ளும்.
தாத்தா, மகன் நல்லபடியாக இருந்த வீட்டில் பேரன்கள் இருக்க முடியாமல் போய்விடுவதுண்டு. இது ஏன்? பிறப்பு லக்கினம் மாறி விட்டது. லக்கினம் மாறி விட்டால் வீடு கை மாறி விடும். இதுதான் மனைவிதி சாஸ்திரம். இதில்தான் ரகசியமும் உள்ளது.
இந்தக் கட்டுரையின் ஆசிரியரான எனக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்தான் சொந்த ஊர். இங்கு எங்கள் வீடு கட்டி சுமார் 110 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் வீடு பெரிய வீடு. எங்கள் தாத்தாவிற்கு ஆறு குழந்தைகள். என் அப்பா என் தாத்தா வீட்டில் இரண்டாவது மகன். இந்த வீடு என் அப்பாவின் பாகத்திற்குப் பாகச் சொத்தாய் வந்தது. எங்கள் அப்பாவிற்கு என்னைச் சேர்த்து ஐந்து குழந்தைகள். எங்களுக்குத் திருமணம் முடிந்த பின்பு, எங்கள் அப்பா காலத்திற்குப் பிறகு எங்களின் குழந்தைகள் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. ஆனால் வீடு இன்றும் உள்ளது. , திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த வீட்டில் வடகிழக்கு மூலையில்தான் சமையலறை இருக்கிறது. சமையலறை அகினியில்தானே இருக்க வேண்டும். இங்கு எவ்விதப் பிரச்சனையுமே இல்லையே...
இது கர்மாவிற்குத் தக்கபடி ஒரு மனிதனின் திசைகள் (ஜாதகப்படி மாறி) செயல்படுகிறது.
இதற்கான விளக்கத்தைப் பின் வரும் ஜாதகத்தின் வழியாகக் காண்போம்.

லக்கினம் என்பது கிழக்கு - உதயம்
ஏழாமிடம் என்பது மேற்கு - அஸ்தமனம்
இந்த ஜாதகப்படி இவருடைய திசைகள் மாறி விட்டன. இந்த ஜாதகருடைய கர்மாவுக்குத் தக்கபடி திசைகள் மாறி செயல்படும், பிறப்பின் தன்மைக்கேற்ப மேற்கு திசை கிழக்காக மாறி செயல்படுகிறது.
கும்பம் 4ஆம் வீடு இவர் தெற்கு பகுதியில் (தெற்கு முதல் வடக்காக) இறைவனை வைத்து வழிபடுவது சிறப்பைத் தரும் வடக்கு தெற்காக மாறிவிட்டது. இதுதான் இந்த மனையின் ரகசியம். இதுதான் மனை விதி சாஸ்திரம்.
சமையலறை தென்கிழக்குப் பகுதி வடமேற்கு பகுதி தென் கிழக்காக மாறி விட்டது. வடமேற்கில் சமையல் அறை இந்த ஜாதகருக்கு சிறப்பாக இருக்கும்.
இந்த ஜாதகருடைய 4 ஆம் வீட்டு அதிபதி சனி பகவான் கடகத்தில் இருக்கிறார். இதனால் தலைவாசல் வடக்கு பக்கம் இருக்க வேண்டும். நான்காமிடம் வண்டி, வாகனம் வடக்குப் பகுதி தலைவாசல் சிறப்பைத் தரும். திசைகள் மாறும் பொழ்து கிரகங்கள் எங்கிருக்கிறார்களோ அதன்படிதான் மனைவிதி சாஸ்திரம் செயல்படும். இதுதான் உண்மை.
வாடகை வீடு
வாடகை வீட்டின் சொந்தக்காரர் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் குடியிருப்பவர்களும் இருப்பார்கள். வீட்டின் உரிமையாளரைப் பொறுத்தே வாடகைக்கு இருப்பவர்களின் நிலையுமிருக்கும். அவர்கள் நன்றாக இருந்தால் இவர்களும் நன்றாக இருப்பார்கள்.
அபார்ட்மெண்ட்
பூமியிலிருந்து 40 அடிக்கு மேல் ஒரு கட்டிடம் இருந்தால் அங்கு எவ்வித வாஸ்து தோசமும் இல்லை. 10 அடிக்கு மேல் வாஸ்து தோசம் இல்லை.
குறிப்பு:
இந்தக் கட்டுரை குறித்து சில வாஸ்து நிபுணர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூமியில் மனிதன் பிறக்கும் போதே இறைவன் நமக்கு அனைத்தையும் கொடுத்து விட்டார். அவர் கொடுத்த நிலைகளை நாம் ஒவ்வொருவரும் அடைந்து கொள்கிறோம். அதை வாஸ்து சாஸ்திரமோ, பிற தந்திரங்களாலோ மாற்றிக் கொள்ளலாம் என எண்ணுதல் கூடாது.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.