பாட்டிமை நாளில் செய்யக்கூடாது - ஏன்?
உ. தாமரைச்செல்வி
பாட்டியமை நாளில் எந்தவொரு நல்ல செயல்களையும் செய்யக்கூடாது என்கிறார்களே ஏன் தெரியுமா?
பிரதமை திதியைப் பாட்டியம் என்று சொல்வா ர்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழுமதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் சொல்வார்கள். கதிர் வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் பாட்டிமை நாட்களில் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய நாளில் எதையும் செய்யக் கூடாது என்பார்கள். போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.