ஒரு பெண்ணின் உடலில் மச்சம் இருக்கும் இடத்தைக் கொண்டு அவருக்கான குணநலன்களையும், பலன்களையும் அறிய முடியும் என்கின்றனர்.
* நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடம் - அப்பெண்ணுக்கு உயர் பதவியிலும், பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவளுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
* நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் - அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
* நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் - அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால், அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
* மூக்கின் மீது எங்காவது மச்சம் - அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
* மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் - அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
* மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் - அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனைப் பொருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
* மோவாயில் மச்சம் - மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணைக் கணவராக அடைந்திடுவாள்.
* இடது கன்னத்தில் மச்சம் - மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதைச் செய்து முடிக்கப் பலர் காத்திருப்பார்கள்.
* வலது கன்னத்தில் மச்சம் - கஷ்டங்கள் பலவற்றைச் சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும், சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.
* கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் - முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
* தலையில் மச்சம் - அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
* நெற்றியின் நடுவில் மச்சம் - அவள் அதிகாரப் பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.
* இரு புருவத்துக்கிடையே மச்சம் - மேற்சொன்ன பலன்.
* நெற்றியில் வலது பக்கம் மச்சம் - வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
* காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் - வாழ்க்கை வசதியுடையதாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.
* இடது தாடையில் மச்சம் - ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.
* கண்களில் மச்சம் - வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
* காதுகளில் மச்சம் - ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்குத் தனி மதிப்பு இருக்கும்.
* நாக்கில் மச்சம் - அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.
* கழுத்தில் மச்சம் - வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் பெறுவாள்.
* இடதுபக்க தோளில் மச்சம் - அதிகமான சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்குத் தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
* மார்பில் மச்சம் - பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.
* நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் - அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
* தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் - அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
* தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.
* முதுகில் மச்சம் - கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.
* உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் மச்சம் - அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.
* பிறப்புறுப்பில் மச்சம் - இப்பெண்ணை விட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் அனைத்தும் இவளைத் தேடி வரும்.
* தொடையில் மச்சம் - இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாகக் கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.
* இடது முழங்காலில் மச்சம் - புத்திக் கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.