1. ஒருவரது பிறப்பு சாதகம் இருப்பின் அதனை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜெனன சாதகம் இருப்பவருக்கு அன்றைய கோட்சாரப்படி கிரகங்களை அந்தக் கால அடிப்படையில் அடைத்து இரண்டையும் இணைத்துப் பார்த்து ஒப்பிட்டு, பின்னர் கிரகங்களின் நட்சத்திரக் கால் பயணம் கண்டு அதன்படி நிதானித்துப் பலன் கூற வேண்டும்.
2. அப்படி அவருக்கு ஜெனன சாதகம் இல்லை எனில், தற்கால கோட்சாரத்தை அன்றையக் கால நிலையின் அந்த மணி நேரக் கணக்கின் படி எப்படி ஒரு குழந்தையின் பிறந்த நேரம் வைத்து சூரிய உதயம் நேரம் அடிப்படையில் கழித்து கணக்கிட்டு உதயாதி நாழிகை எடுத்து மாத இலக்னம், இருப்பு கழித்து கணக்கிட்டு திசாபுத்தி எடுப்பது போல் அனைத்தையும் கணக்கிட்டு அதன் பின்னர் அவர்கட்கு அவர்கள் கேட்கும் வினாவிற்குத் தகுந்தபடி பலன் கூற வேண்டும்.
3. கால்நடைகளுக்குக் கூறுகின்ற போதும், இந்த ஆரூட கோட்சார கட்டத்தைப் பயன்படுத்தி அந்தக் கிரக நிலைகளுக்கேப் பலன் சொல்லலாம்.
4. வானியல் மழை, புயல், காற்று, மின்னல் தொடர்ந்த யாவற்றிற்கும் இந்த முறையினில் மிக அழகாய் துல்லியமாய்ப் பலன் கூறலாம். அனைத்திற்கும் அன்றைய கட்டத்தில் உள்ள அதேக் கிரகங்களே.
5. கடல் நிலை தொடர்ந்தவற்றிற்கும் இதனை அழகாகப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக பலன் வரையறுக்கலாம்.
6. நமக்கு மேற்கூறிய அனைத்தின் சோதிட பல நுால் அறிவுப்புலமை, நினைவு சக்தி அதிகம், பயிற்சி இருத்தல் மிக மிக அவசியம்.
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 – 3 பூரட், 4 – 16 உதி, 17 – ரேவதி - மீனம்.
சந்திரன் - கேட்டை – உத்திராடம்.
செவ்- 6 – 12 மிருக 4, 13 – திருவாதிரை – மிதுனம்.
புதன் - 2 – பூட், 3 – 9 உதி, 10 – 16 ரேவதி மீனம். 17 – 24 – அசுவினி, 25 – பரணி – மேடம்.
குரு - மாசி 12 இல் ரேவதி - மீனம்.
சுக்கிரன் - 3 – 8 அசுவினி, 9 – 19 பரணி, 20 – கிருத் – மேடம். 23 கிருத் – ரிடபம்.
சனி - சதயம் 1 ல் - கும்பம்.
ராகு - அசுவினி – 4 ல் மேடம்.
கேது - சுவாதி 2 ல் துலாம்.
1. வானியல் மழை நிலையில் மீன குரு மழையை வருவிக்கும். வெப்பக்காற்றுச் சலனத்தினால் சுழலினால் மழையை வருவிக்கும்.
2. கால்நடைகளுக்குப் பார்க்கின்ற போது மிகவும் ஆரோக்கியமாக செழிப்புடன் அவை காணப்படும்.
3. எள்ளின் விலை மற்றும் எண்ணெய், கச்சா கனிமா எண்ணெய் உள்ளிட்டவை மிக சிறப்பாய் மிக அருமையாய் கிடைக்கும்.
4. கல்வி கேள்விகளில் புதிய சீர்திருத்தங்கள் உரிய அரசாணையுடன் நேர்மையாய், முறையாய் அமையும்.
5. கடலில் அலைகள் அதிக உபரி நீருடன் சிறப்பாய் அமைந்திருக்கும்.
- இவ்விதம் பல்வேறு நிலைகளிலும் பலன் கூற முடியும்.
(கற்பித்தல் தொடரும்...)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.