ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
முனைவர் தி. கல்பனாதேவி
3. திதி, கரணம், யோகம்
அடிப்படை அளவுகள்
ஒரு நாளின் 24 மணிநேர காலத்தினை சிறுபொழுதாகப் பிரித்து, சூரிய உதயம் முதல் அனைத்தும் ஆறு காலங்களில், அவை ஒவ்வொன்றும் நான்கு மணி நேரமாகப் பிரிக்கப் பெற்று, 24 மணி நேரமும் முறையாய் பெயர் வைக்கப் பெற்றுள்ளன. அவை;
வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, இடை, யாமம் என வழங்கப் பெறுகின்றது.
யாமம் - 4 மணி நேரம்.
6 யாமம் - ஒரு நாள். (24 மணி நேரம்)
24 மணி நேரம் - ஒரு நாள்.
24 நிமிடம் - ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை - 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம்.
60 நிமிடம் - ஒரு மணி நேரம்.
24 மணி நேரம் - ஒரு நாள்.
ஏழு நாள் - ஒரு வாரம்.
இரண்டு வாரம் (15 நாள்) - ஒரு பட்சம்.
இரு பட்சம் - ஒரு மாதம். (30 நாட்கள்)
இரண்டு மாதம் (60 நாட்கள்) - ஒரு ருது.
மூன்று ருது - ஒரு அயனம். (6 மாதம்)
இரண்டு அயனம் - ஒரு ஆண்டு. (12 மாதம்)
இராசிகட்கு அவற்றின் உருவங்களை வைத்து பண்டைய காலத்தில் பெயர் அமைக்கப் பெற்றுள்ளது.
அனைத்துப் பலன்கள் அறிவதற்கும் சூரியனே மிக இன்றியமையாதவராக உள்ளமையால் இவரை மையப்படுத்தியே பலன்கள் பழைய கால அளவீட்டு முறையினில் நாழிகை அமைப்பினில் கணிக்கப் பெறுகின்றன.
(சோதிட அரிச்சுவடி, ப.121) இப்பட்டியலின் வழி இராசிகளின் தன்மைகளை சோதிட அரிச்சுவடி குறிப்பிடுவதைக் காணலாம்.
தமிழிற்கும், சோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் மாதங்கள் பன்னிரண்டனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
இருதுக்கள் ஆறு: இருதுக்கள் என்பது தக்க அதற்குரிய பருவங்களைக் குறிக்கும். இரண்டு மாதம் கொண்டது ஒரு இருது எனப்படும்.
நட்சத்திரங்கள்
360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலைகள் கொண்டதாகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் என 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் கொண்டு இராசி மண்டலத்தில் ஒவ்வொரு இராசி வீட்டிலும் இரண்டே கால் நட்சத்திரம் ஒன்பது பாதம் ஆகக் கொண்டு அனைத்தும் அமைந்துள்ளன.
ஒவ்வொரு நட்சத்திரங்கட்கும் சில சிறப்புத் தன்மைகள் காணப்படுகின்றன.
சந்திர (தாரா) நட்சத்திர பலன் - கணிக்கும் முறை
சந்திரனை மையப்படுத்தி பலன்கள் அவன் செல்லும் நட்சத்திரங்களில் பயணம் செய்வதை வைத்துப் பலன் பார்க்கும் முறை இது.
இதற்கு அவரவர் பிறந்த நட்சத்திரம் முதல் சந்திரன் கணக்கிடும் நாள் அன்று உள்ள நட்சத்திரம் வரை வைத்துப் பலன் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்ப்பதற்கு நட்சத்திரங்களை எண்ணி ஒன்பதால் வகுத்து மீதம் உள்ளதற்குப் பலன் குறிப்பிட்டுள்ளனர்.
1. ஜன்ம நட்சத்திரம் அனு ஜென்ம நட்சத்திரம் திரிஜன்ம நட்சத்திரம் - மனகிலேசம் தரும்.
2. ஸம்பத் நட்சத்திரம் - செல்வம் அளிக்கும்.
3. விபத்து நட்சத்திரம் - விபத்தைத் தர வல்லது.
4. ஷேம நட்சத்திரம் - நன்மை அளிக்கும்.
5. பிரத்யர நட்சத்திரம் - செயல் முடிவுறுதல் கடினம்.
6. ஸாதக நட்சத்திரம் - செயலைச் செவ்வனே முடிக்க வல்லது.
7. வத அல்லது நிதன நட்சத்திரம் - மரணம் அல்லது அதற்கு இணையான கெடுதலைத் தர வல்லது.
8. மைத்ர நட்சத்திரம் - நட்பும் நன்மையும் ஏற்படும்.
9. பரம மைத்ர நட்சத்திரம் - அதிக நட்பு பொருந்தியதால் எச்செயலிலும் வெற்றி.
இருபத்தியேழாவது நட்சத்திரம் அசுபம். ஏக இராசியாகில் நன்மை. இருபத்தியேழாவது நட்சத்திரம், வேறு இராசியாக இருந்தாலும் ஹஸ்தம், சுவாதி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, ரேவதி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், புனர்பூசம், சித்திரை ஆகிய 11 நட்சத்திரங்களுக்குத் தோடமில்லை.
சான்றாக ஒருவரின் நட்சத்திரம் பரணி எனில் இன்று சந்திரன் நிற்கும் நட்சத்திரம் உத்திரட்டாதி வரை எண்ணி அந்த எண்ணை 25 ஐ 9 இல் வகுக்க மீதி உள்ள எண் 7 ஆகும். இதன் பலன் வத அல்லது நிதன நட்சத்திரம் - மரணம் அல்லது அதற்கு இணையான கெடுதலைத் தர வல்லது என நாம் அறிந்து கொள்ளலாம்.
மற்றொரு முறையில் விம்சோத்தரி வரிசை முறை கோள்கள் தெரிந்திருப்பின் எளிய வழியில் பரணி சுக்கிரன் முதல் எண்ணி சூரியன், சந்திரன், செவ்வாய், என எண்ண 7 இல் உள்ள உத்திரட்டாதி - சனியைக் காண்பிக்கும். இத்துடன் முடித்து பலன் 7 ற்கானதை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் பலன் அறிந்து செய்ய மிகுந்த நன்மை தரும் நாள் பார்த்து எந்த ஒரு செயலையும் செய்யலாம்.
திதி
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள துாரம்.
இந்தத் திதிகள் சுக்கில பட்சம் சுக்கிலம் - வெண்மை உடையது. வளர்பிறைப்பட்சம் என்றும், கிருஷ்ண பட்சம், கிருஷ்ணம் கருமை தேய்தல் உடைய பட்சம் ஆதலினால் கிருஷ்ண பட்சம், தேய்பிறை பட்சம் என்றும் வழங்குகின்றோம்.
ஆக வளர் பிறைத் திதிகள், தேய்பிறைத் திதிகள் என பிரதமை முதலாக சதுர்த்தசி வரை முறையாக அமைந்து வளர்பிறை முடிபு பௌர்ணமியாகவும், தேய்பிறை முடிபு அமாவாசை ஆகவும் ஆக வளர்பிறைத்திதிகள் 15 ம், தேய்பிறைத்திதிகள் 15 ம் சேர்ந்து 30 திதிகள் ஆக அமையும்.
யோகம்
யோகம் எனும் வடமொழிச் சொல்லிற்கு சேர்க்கை என்பது பொருள். இந்த யோகத்தினால் மிகுந்த நற்பலன் அமையும்.
கரணங்கள்
கரணம் என்பது திதியின் சரி பாதி அளவு ஒரு கரணமாகும். “கரணாத் காரிய ஸித்தி” கரணத்தை அறிந்து செய்வதால் செயல்கள் வெற்றியாய், இனிமையாய் முடியும்.
கரணம்
கணிதம், பஞ்சாங்கத்தின் உறுப்பினுள் ஒன்றாகிய பதினொரு கரணங்கள். 1.சாத கருமம். ஒரு காரியத்திற்கு உதவியாக நிற்பதுமாம். (தரு) 2.ஒவ்வொரு திதியையும், இரு சம பாகங்களாகப் பிரித்தலால் ஏற்படும் ஒவ்வொரு பாகத்திற்குப் பெயர். அவை 11. பவ, பாலவ, கவுலவ, தைதுலை, கரசை, வநசை, பத்திரவா, சகுனி, சதுர்ப்பாதை, நாகவா, கிமிந்துக்கினம். மணச் சடங்கு, கணிதம். இவற்றுள், கரணங்களின் உருவம்: 1.பவ கரணம் - இது சிங்க உருவம் உள்ளது. 2.பாலவ கரணம் - இது புலி உருவம் உள்ளது. 3.கவுலவ கரணம் - இது பன்றி உருவம் உள்ளது. 4.தைதுலைக் கரணம் - இது கழுதை உருவம் உள்ளது. 5.கரசைக் கரணம் - இது யானை உருவம் உள்ளது. 6.வனசைக் கரணம் - இது எருது உருவம் உள்ளது. 7.பத்திரைக் கரணம், இது கோழி உருவம் உள்ளது. 8.சகுனிக் கரணம் - இது காக்கை உருவம் உள்ளது, 9.சதுர்ப்பாத கரணம் - இது நாய் உருவம் உள்ளது. 10.நாகவ கரணம் இது பாம்பு உருவம் உள்ளது, 11.கிமிஸ்துக்கின கரணம் - இது புழு உருவம் உள்ளது.
மொத்தமுள்ள முப்பது திதிக்கும் 60 கரணங்கள் கணக்கிடப்படும். சாத்திரத்தில் 60 கரணங்கள் இல்லை. மாறாக 11 கரணங்களே உள்ளன. இப்பதினோரு கரணங்களில் முதல் 7 கரணங்கள் அடுத்து வந்து போகும். மீதமுள்ள 4 கரணங்கள் மொத்தமுள்ள 30 திதிகளில் 1 முறையே வந்து போகும்.
சர கரணங்கள்
பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரை ஆகிய ஏழும் 30 திதிகள் கொண்ட மாதத்தில் 8 முறை வரிசையாக வந்து போகும்.
ஸ்திர கரணங்கள்
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் ஆக இந்த எஞ்சிய கரணங்கள் நான்கும் ஒரு முறையே வந்து போகும். இவை அமாவாசையின் முன்னர் உள்ள திதியான சதுர்த்திசியின் இரண்டாவது பாதியில் சகுனி கரணமும், அமாவாசையின் சதுஷ்பாதம், நாகவம் என்ற கரணங்களும், வளர் பிறை பிரதமை திதியின் முதல் பாதியில் கிம்ஸ்துக்கினம் கரணமும் வருகின்றன. இவை 30 திதிகள் கொண்ட ஒரு வட்டத்தில் ஒரு முறையே வந்து போகின்றன.
(கற்பித்தல் தொடரும்...)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.