இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


7. சென்ம நட்சத்திரப் பலன் (சந்திர நட்சத்திரம்)


அசுவினி

அசுவினி 1ம் பாதம் சந்திரனின் மேஷ செவ்வாய் நவாம்ச பலன்

தெய்வீக கன அருளைப் பெற்றிருப்பார்கள். மஹாலஷ்மியுடன் கூடினவன். தன வந்தனாகவும் புத்தி சாதுர்யத்தினால் புகழையும், செல்வத்தையும் பெறுவான். அற்பமான எண்ணங்களும், புறம் பேசும் குணமும் உண்டு.

அசுவினி 2ம் பாதம், சந்திரனின் ரிஷப சுக்கிர உச்ச நாவம்சம்

புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், சரித்திரங்கள் முதலியவற்றைப் பெரியவா்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஊக்கத்தைப் பெற்றிருப்பார்கள், மற்றவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு, அன்புடன் பழகுவார்கள், வாதம் செய்வதிலும், டாம்பீகத்திலும் பிரியமுள்ளவனாக இருப்பார்கள்.

அசுவினி 3ம் பாதம் சந்திரனின் மிதுன புதன் நவாம்சம்

வேத, சாஸ்திரம், விஞ்ஞானம், சோதிஷம், முதலியவைகளில் பிரியம் கொண்டவா்கள். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குப் போதிப்பார்கள், உஷ்ண திரேகத்தையும், மூல ரோக வியாதிகளையும் பெற்றிருப்பார்கள்.

அசுவினி 4ம் பாதம் சந்திரனின் கடக சந்திர ஆட்சி நவாம்சம்

திறமையையும், விசாலமான புத்தி கூர்மையையும் பெற்றிருப்பார்கள், தேவதாலய. தெய்வீக வழிபாடுகளையும், சாஸ்திர சோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், மற்றவர்களைக் கிரஹித்துக் கொள்ளும் சக்தி பெற்றவர்களாகவும், நீதி, நேர்மை உண்மையான வழிகளைப் பின்பற்றியும் இருப்பார்கள்.

பரணி

பரணி 1ம் பாதம் சந்திரனின் சிம்ம சூரிய நவாம்சம்

பருத்த திரேகத்துடனும், நற்குண நற்செய்கைகளுடனும் எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்பவா்களாகவும், நன்றி அறிவு உள்ளவர்களாகவும் காமப்பிரியர்களாகவும், அகங்காரக் குணத்துடனும் இருப்பார்கள்.

பரணி 2ம் பாதம் சந்திரனின் கன்னி புதன் நவாம்சம்

திறமைகளைக் கொண்டவர்களாகவும், மற்றவர்களைப் புரிந்து கொண்டு, பழகும் குணங்களுடனும், தான தருமங்களைச் செய்யும் இயல்புடையவராகவும், எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளும் சக்திகளைப் பெற்றவர்களாகவும், நற்குணங்களைப் பெற்றுமிருப்பார்கள். மற்றவர்களால் புகழையும், கீர்த்தியையும் பெறுவார்கள்.

பரணி 3ம் பாதம் சந்திரனின் துலாச் சுக்கிர நவாம்சம்

அதிர்ஷ்ட தேவதைகளின் அருளினால் எக்காரியங்களிலும் வெற்றியைப் பெற்றும் சந்தோஷங்களை, சௌகரியங்களுக்கு குறைவில்லாமலும், திடகாத்திர திரேகத்துடனும், பெரிய கண்களுடனும், சிவந்தவர்களாகவும் இருப்பார்கள்.

பரணி 4ம் பாதம் சந்திரனின் விருச்சிக செவ்வாய் நீச நவாம்சம்

பருத்த திரேகத்துடனும், தோற்றத்துடனும், துன்மார்க்க குணத்துடனும், பிடிவாத சுபாவத்துடனும், வஞ்ச நெஞ்சம் கொண்டவராகவும், அடிமை வாழ்க்கைக அல்லது சாதாரணத் தொழிலை அல்லது வேலைகளைச் செய்பவராகவும் இருப்பார்கள். தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் சமர்த்தராக இருப்பார்கள்.


கிருத்திகை

கிருத்திகை 1ம் பாதம் சந்திரனின் தனுர் குரு நட்பு நவாம்சம்

பூமி, காணி, வீடு முதலிய சொத்துக்களுடன், மாடு, கன்று, பால் பாக்கியங்களுடனும், செல்வந்தராகவும், முன்கோபியாகவும், ஆசார அனுஷ்டானங்களுடனும், வியாதி, நோய்களுடனும் இருப்பார்கள், கல்வியில் அதிகப் பற்றுதல் இருக்காது திறமைகளுடன் இருப்பார்கள்.

கிருத்திகை 2ம் பாதம் மகரச் சனி பகை நவாம்சம்

ஆசார அனுஷ்டானங்களிலும், வேத, சாஸ்திர, விஞ்ஞானங்களிலும், புராணங்களிலும் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், மூர்க்கராகவும், கெட்ட சுபாவங்களைக் கொண்டவா்களாகவும், கல்வியில் திறமையும், கலைகளை ஆர்வங்களுடன் பயிலுபவராகவும் இருப்பார்கள்.

கிருத்திகை 3ம் பாதம் கும்பச் சனி பகை நவாம்சம்

பைத்தியக்காரன் அல்லது அசடுகளாகவும் தைர்யங்களுடனும், பிறருக்கு உபத்திரங்களைச் செய்யும் குணங்களுடனும், புத்திக் குறைவுடனும் இருப்பார்கள். அமைதியான குணம் இருக்கும். கெட்ட நடத்தையுள்ள ஸ்திரீகளுடனும், கெட்டப் பெண்களுடனும் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

கிருத்திகை 4ம் பாதம் சந்திரனின் மீன குரு நவாம்சம்

ஏழ்மையுடையவனாகவும், திரேக அசௌக்கியங்களுடனும், துக்கங்களை எப்போதும் அனுபவிப்பவனாகவும், மன ஸ்தாபங்களில் இடையே வாழ்பவனாகவும், பிறரிடம் சண்டை செய்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள், கல்வியில் ஊக்கம் இருக்காது.

ரோஹிணி

ரோஹிணி 1ம் பாதம் மேஷாம்சம்

ஆசைகள் அதிகம் கொண்டவராகவும், ஸ்திரீகளிடம் விருப்பம் கொண்டவராகவும் தனவான்கள், கற்றறிந்தவர்கள் நட்பைப் பெற்றவர்களாகவும், அழகும் கம்பீரமானத் தோற்றத்துடனும், ஊர் சுற்றும் சுபாவ குணங்களுடனும், கற்றிந்தவர்களாகவும், வாக்கில் பிசகில்லாதவராகவும் இருப்பார்கள்.

ரோஹிணி 2ம் பாதம் ரிசபாம்சம்

நல்ல சுபாவங்களுடனும், ஆசார அனுஷ்டானங்களைக் கொண்டவர்களாகவும், உண்மை, நீதி, நேர்மையுடன் கூடியவர்களாகவும், மாந்தீரிகம், சாஸ்திரங்களில் பிரியமுள்ளவர்களாகவும், முன் கோபத்துடனும் ஸ்திரீகளிடம் நேசம் கொண்டவகர்களாகவும் இருப்பார்கள்.

ரோஹிணி 3ம் பாதம் மிதுனாம்சம்

கல்வியில் பட்டம் பெற்றவர்களாகவும், திறமை கொண்டவர்களாகவும், கணிதத்தில் மேதையாகவும், சங்கீதத்திலும், வேடிக்கை வித்தைகள், மாயா ஜாலங்கள் செய்பவர்களாகவும், புலவர்களாகவும் இருப்பார்கள்.

ரோஹிணி 4ம் பாதம் கடகாம்சம்

பிறர் சொல் பொறுக்க மாட்டாதவர்களாகவும், நீதி, நேர்மையுடனும், ஸ்திரீகளிடம் பழகுபவர்களாகவும் இருப்பார்கள் தனவந்தர்களாகவும், செல்வாக்குடனும் இருப்பார்கள்.


மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் 1ம் பாதம் சிம்மாம்சம்

செல்வந்தராக இருப்பார்கள், திறமைகளுடனும், விசால புக்தியுடனும், அழகுள்ளவர்களாகவும், ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கை இருக்காத மன அழுத்தம் கொண்டவர்கள். தேச யாத்திரைகளில் பற்றுதல் இருக்கும். பிறர் பொருளை அபகரிக்கும் குணம் உண்டு. திரேகத்தில் சிறங்கு முதலான நோய்கள் இருக்கும்.

மிருகசீரிஷம் 2ம் பாதம் கன்னியாம்சம்

உண்மையைப் பேசுதல், உண்மையுடன் பழகுதல், சத்தியவான், திறமைகளைப் பெற்றவன் முன் கோப குணம், பெண்களிடம் அற்ப ஆசையுடன் இருப்பார்கள்.

மிருகசீரிஷம் 3ம் பாதம் துலாம்சம்

சந்தோஷமாக காலங்கழிப்பவராகவும், உதாரகுணம் கொண்டவர்களாகவும், ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதல் கொண்டவராகவும், தெய்வீக தேவாலய வழிபாடுகளில் பங்கு கொண்டவர்களாகவும், சாதுவாகவும் இருப்பார்கள்.

மிருகசீரிஷம் 4ம் பாதம் தேளாம்சம்

திறமையுள்ளவர்களாகவும், சாதுவாகவும், தான தருமங்களைச் செய்பவர்களாகவும், பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பவர்களாகவும், சத்திய நெறி கொண்டவர்களாகவும், காமகுணம், பிடிவாத குணங்களுடன், ஏமாற்றுபவர்களாகவும், நெஞ்சில் அழுத்தம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

திருவாதிரை

திருவாதிரை 1ம் பாதம் தனுராம்சம்

சுத்த ஹருதயமுள்ளவர்களாக இருப்பார்கள் திறமை, நற்குணம், மற்றவர்களிடம் எளிதில் நண்பராகும், ஆற்றல், பொருளைச் சேர்த்து வைப்பதில் பிரியம், பண விஷயங்களில் சாதுர்யமாக சம்பாதித்து, கணக்கு விஷயங்களில் திறமையுடன் இருப்பது போன்ற குணமுடையவர்கள்.

திருவாதிரை 2ம் பாதம் மகராம்சம்

வாதங்களில் பேசுவதில் கண்டிப்பான பேச்சுகளையும், கலைகளில் பற்றுதல் கொண்டவர்களாகவும், பிறர் சொல்வதை அறிந்து கொள்வதற்கு முன்பே, கோபம் கொள்ளும் குணமும், பந்துக்களுடன் விரோதம், பாராட்டுவதும், திடமான தைர்யத்தையும் பெற்றிருப்பார்கள்.

திருவாதிரை 3ம் பாதம் கும்பாம்சம்

பிறரைப் பற்றி இகழ்வாக புறம் பேசித் திரிவார்கள், உடல் நோயுடனும் அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டும், ஆணித்தரமான பேச்சுக்களைப் பேசியும், பிறரிடம் மனம் இளகாமல் இருப்பதும் ஸ்திரீ பிரஜைகளால் துாற்றப்படும், வாழ்க்கையை நடத்துவார்கள், அசடு போல பார்வைக்கு பேசி வருவார்கள்.

திருவாதிரை 4ம் பாதம் (மீனாம்சம்)

பந்துஜன விரோதங்களுடன், சுபகாரியவாதியாகவும் பயித்தியக் காரன் போன்ற செய்கைகளுடனும், பணம் சம்பாதிப்பதில் நீதி, நேர்மை இல்லாதவராகவும், காமாந்தகராகவும் இருப்பார்கள், கணிதத்தில் திறமையாகவும், எழுதுவதில் சாமர்த்தியமுள்ளவராகவும் இருப்பார்கள்.

புனர்பூசம்

புனர்பூசம் 1ம் பாதம் (மேசாம்சம்)

பருத்த சரீரத்துடன், ஆசைகள் அதிகம் கொண்டவர்களாகவும், காது மந்தமாகவும், சுறுசுறுப்பு குறைந்தும், கல்வியில் திறமை, ஊக்கம் கொண்டவர்களாகவும், மனதில் ஸ்திரமான எண்ணங்களில்லாமலும், மனதை விட்டு வெளியே பேசாமலும் செல்வங்களுடன், பித்த திரேகத்துடன் இருப்பார்கள்.

புனர்பூசம் 2ம் பாதம் (ரிஷபாம்சம்)

சோம்பேறிகளாகவும், ஆசார அனஷ்டானங்கள், தெய்வ பக்தி வழிபாடுகள் குறைந்தும், வியாதிகளுள்ளவர்களாகவும், டாம்பீகக் குணங்களுள்ளவர்களாகவும், பேசும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

புனர்பூசம் 3ம் பாதம் மிதுனாம்சம்

ஊர் சுற்றும் குணங்களுடனும், குஷ்ட ரோக வியாதிகளுடனும், பற்களைச் சுத்தம் செ்யாது துர்நாற்றம் வீசும் வியாதிகளுடனும், நீண்ட ஆயுளுடனும் பிறரை தவறாக அறிந்து கொள்ளும் குணங்களுடனும் இருப்பார்கள்.

புனர்பூசம் 4ம் பாதம் (கடகாம்சம்)

அழகான திரேக அங்கலஷங்களுடனும், குள்ளமாகவும், நன்மைகளைப் பிறருக்குச் செய்பவர்களாகவும், நன்றி மறவாத குணமுடையவர்களாகவும், தெளிவான பார்வைகளுடனும் இருப்பார்கள்.


பூசம்

பூசம் 1ம் பாதம் (சிம்மாம்சம்)

பெரியவர்களிடம் பக்தி, சிரத்தையுடையவர்களாகவும் கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், தெய்வபக்தி, வழிபாடுகள் நிரம்பப் பெற்றவர்களாகவும் தார்மீக சிந்தனையுடன் கூடினவர்களாகவும், செல்வந்தர்களாகவும், படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றவர்களாகவும், சரீரத்திற்குள் வியாதிகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பூசம் 2ம் பாதம் (கன்யாம்சம்)

மென்மையான குணம் கொண்டவர்களாகவும் பிறருக்கு ஆசிரியர்களாகவும், புத்திசாலியாகவும், சண்டையிடுவதில் பிரியங் கொண்டவர்ளாகவும், செல்வங்களுடன், ஸ்தீரி போகத்தைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

பூசம் 3ம் பாதம் (துலாம்சம்)

கவலைகளை மறந்தவராய் சதா சிரித்துப் பேசும் குணங்களுடனும், பந்துக்கள் நண்பர்களால் புகழ் பெருமைகளைப் பெற்றவர்களாகவும், சாமர்த்தியசாலிகளாகவும், எல்லோருடனும் சமமாகப் பழகுபவர்களாகவும், கல்வி ஞானம் பெற்றவர்களாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் சுபாவத்துடனும் இருப்பார்கள்.

பூசம் 4ம் பாதம் (தேளாம்சம்)

சண்டையிடுவதில் பிரியம் கொண்டவர்களாகவும், கெட்ட எண்ணங்களுடனும் பழகுபவர்களாகவும், கோபியாகவும், காம அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

ஆயில்யம்

ஆயில்யம் 1ம் பாதம் (தனுராம்சம்)

சதா, தாம் தரித்திர நிலைமையில் இருப்பவர்களைப் போல மற்றவா்களிடம் பேசி வருவார்கள். இரத்தக் கண்களுடனும், அகங்காரகுணத்துடனும், மற்றவர்களிடமிருந்து எவ்வித பொருள்கள் அபகரிக்கலாம் என்ற நோக்கங்களுடனும், கல் நெஞ்சக்காரர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். கோபமும் துன்மார்க்கத்தனமும் அதிகமிருக்கும்.

ஆயில்யம் 2ம் பாதம் (மகராம்சம்)

சிவந்த மேனி, அகலமான கண்கள், ஆசார அனுஷ்டானத்தில் சிறிது நம்பிக்கையும், தான் நியாய வழிகளில் செல்லாது, பிறருக்கு நியாயங்களை போதிப்பவராகவும், முன் கோபங்களுடனும், துஷ்டா்களாகவும் இருப்பார்கள்.

ஆயில்யம் 3ம் பாதம் (கும்பாம்சம்)

மனைவியை சித்ரவதை செய்பவனாகவும், ஸ்திரி ஜனங்களால் துாற்றப்படுபவனாகவும், கோபம், அகங்கார குணங்களைக் கொண்டவனாகவும், நன்றியை மறப்பவர்களாகவும், யோசித்துப் பார்க்கும் குணமில்லாதவர்களாகவும், மெதுவான போக்கையும் கொண்டவராகவும் இருப்பார்கள்.

ஆயில்யம் 4ம் பாதம் (மீனாம்சம்)

கொலை செய்யும் குணங்களாகவும் தாழ்ந்த ஜாதி ஜனங்களால் நட்பு, சகவாசம், புணருதல், இன்பங்களை அனுபவிப்பவர்களாகவும், பொன், நகைகளில் பணத்தை சம்பாதிப்பதில் பிரியம் கொண்டவர்களாகவும், அசட்டு சுபாவம், பயித்தியக் காரர்களிடம் சினேகங்களுடனும், வியாதிகளைக் கொண்டவர்களாகவும் செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள்.


மகம்

மகம் 1ம் பாதம் (மேசாம்சம்)

சிவந்த கண்களுடனும், கல்வி பயில்பதிலும், சாஸ்திர ஆராய்ச்சியிலும் திறமை உள்ளவர்களாகவும், தரும சிந்தனை, பரோபகாரச் சிந்தனை, ஆகிய குணங்களுடன் அழகாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள்.

மகம் 2ம் பாதம் (ரிசபாம்சம்)

மந்தமான குணங்களுடனும், செலவு அதிகம் செய்பவராகவும், வியாதிகளைக் கொண்டவாகளாகவும், கௌரவத்துடன் பரிசுத்த குணங்களுடன் இருப்பார்கள்.

மகம் 3ம் பாதம் (மிதுனாம்சம்)

சாதுவாகவும், பிறர் பொருளைப் பார்த்து ஏங்குபவர்களாகவும், வியாதிகளுடனும், பலவானாகவும் இருப்பார்கள்.

மகம் 4ம் பாதம் (கடகாம்சம்)

மனைவியிடம் அடங்கின கணவனாகவும், சரும வியாதிகளைக் கொண்டவர்களாகவும், சீலமுடையவர்களாகவும், ஸ்திரீகள் பேச்சுக்கு அதிக மன மதிப்பைக் கொடுப்பவர்களாகவும், வசியப்படுத்தக் கூடிய மதுரமான பேச்சுக்களைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பூரம்

பூரம் 1ம் பாதம் (சிம்மாம்சம்)

ஆசார சீலராகவும், தைர்யங்களைப் பெற்றும், வியாபார எண்ணங்களைக் கொண்டும், புத்தி சாதுர்யங்களைப் பெற்றவர்களாகவும், துடுக்காகவும், துன்மார்க்க குணங்களுடனும் ஸ்திரிகளிடம் பழகுபவர்களாகவும் இருப்பார்கள்.

பூரம் 2ம் பாதம் (கன்னியாம்சம்)

அதிர்ஷ்ட பாக்யங்களை அதிகம் பெறாதவராகவும், விவசாயத் தொழிலில் ஈடுபாடுடையவராகவும், கவலைக் கொண்டவராகவுமிருப்பார்கள்.

பூரம் 3ம் பாதம் (துலாம்சம்)

கீர்த்திகளைப் பெற்றவர்களாகவும், உண்மை, நீதி, நேர்மையுடையவராகவும், நல்ல குணங்களைப் பெற்றும் இருப்பார்கள்.

பூரம் 4ம் பாதம் (தேளாம்சம்)

தெய்வீக தேவாலய வழிபாடுகளில் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதல் இல்லாதவர்களாகவும், திரேகத்தில் காயம் அல்லது வடுவுடனும் தெய்வத்தையும், பெரியோர்களையும் துாஷிப்பவர்களாகவும் இருப்பார்கள்.


உத்திரம்

உத்திரம் 1ம் பாதம் (தனுசாம்சம்)

பந்துக்கள் நண்பர்களிடம் உறவு, நட்பு கொண்டவர்களாகவும், இனிமையான வார்த்தைகளுடன் கூடினவர்களாகவும், நற்குண நற்செய்கைகள், பிறர் செய்த நன்றிகளை மறக்காதவர்களாகவும், யோக பாக்யங்களுடன் இருப்பார்கள்.

உத்திரம் 2ம் பாதம் (மகராம்சம்)

ஏழ்மை, வருமை கொண்டவர்களாகவும், மாமிசங்களில் பிரியம் கொண்டவர்களாகவும், டம்ப குணங்களுடன், அலஷியமாக பேசுபவராகவும் இருப்பார்கள்.

உத்திரம் 3ம் பாதம் (கும்பாம்சம்)

தெய்வீக, தேவலாய வழிபாடுகள், ஆசார ஒழுக்கங்கள் விவசாயத்துடன், மாடு கன்றுகளுடனும், உண்மையைக் கடைப்பிடிப்பவராகவும், வாக்கு நாணயம் தவறாதவராகவும் இருப்பார்கள்.

உத்திரம் 4ம் பாதம் (மீனாம்சம்)

இளம் வயதிலேயே தாய் தந்தையே இழப்பவர்களாகவும், பிறர் செய்த நன்றியை மறக்காதவர்களாகவும், துாஷணமான வார்த்தைகளைக் கொண்டவராகவும், பிறரை மதிக்காதவராகவும் இருப்பார்கள்.

ஹஸ்தம்

ஹஸ்தம் 1ம் பாதம் (மேசாம்சம்)

தெய்வீக வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள், பக்தி, சிரத்தை, பெரியவர்களிடம் மரியாதை நற்குண நற்செய்கைகள், பெரிய மனித சகவாசம், முதலியவைகளைக் கொண்டிருப்பார்கள். துாங்கும் சமயம் அடிக்கடி கனவுகள் இவர்களுக்கு ஏற்படும்.

ஹஸ்தம் 2ம் பாதம் (ரிசபாம்சம்)

இளம் வயதில் தாயாரை இழப்பவர்களாகவும், நாடகம், நாட்டியம், சங்கீதங்களில் பிரியமுள்ளவர்களாகவும், அகங்காரம், வாயாடித்தனம் கொண்டு திட சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.

ஹஸ்தம் 3ம் பாதம் (மிதுனாம்சம்)

தரித்திர குணம் கொண்டவர்களாகவும், நோய்வாய்பட்டு, வியாதிகளுடன் கூடினவர்களாகவும், தந்தையை இளம் வயதில் இழப்பவர்களாகவும், வியாபார குணங்களுடனும், ஸ்திரீகள் மனதைப் போன்றவர்களாகவும் இருப்பார்கள்.

ஹஸ்தம் 4ம் பாதம் (கடகாம்சம்)

உயர்ந்த தோற்றத்துடனும், எல்லோரிடமும் சகஜமாக பேசிப்பழகுவராகவும், தாயாருடைய பற்றுதரைக் கொண்டவர்களாகவும், நற்குண நற்செய்கைகளுடன் சந்தோச குணங்களுடனும் இருப்பார்கள்.

சித்திரை

சித்திரை 1ம் பாதம் (சிம்மாம்சம்)

தன் காரியங்களில் காரியவாதியாகவும், ஊர் சுற்றும் பழக்கங்களுடனும், கண்களில் வியாதிகளுடனும், சொன்ன வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் குணங்களுடனும் திரேகத்தில் மச்சங்களுடனும் கூடி இருப்பார்கள்.

சித்திரை 2ம் பாதம் (கன்னியாம்சம்)

ஏழ்மை வறுமைகளுடனும், உயரமான தோற்றத்துடன் ஸ்திர புக்தி இல்லாமலும், வெளியே சுற்றுபவர்களாகவும், கலையில் ஊக்கம் கொண்டவர்களாகவும், எதிரிகளுடனும், பகைவர்களுடனும் குணமறியாது நட்பு கொண்டுமிருப்பார்கள்.

சித்திரை 3ம் பாதம் (துலாம்சம்)

தைர்யஸ்தர்களாகவும், படிக்கத் தக்கவர்களாகவும், கீர்த்தி பெறுபவர்களாகவும், பராக்ரமசாலிகளாகவும், நல்ல குணங்களுடனும் பரந்த நோக்கமுடையவர்களாகவும் இருப்பார்கள்.

சித்திரை 4ம் பாதம் (தேளாம்சம்)

திறமைசாலிகளாகவும், பிறருடைய குணமறிந்து நடப்பவர்களாகவும், வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள் எதிரிகளிடம் தாழ்ந்து போகுதலும், அடி பணிதல் போன்ற குணமும் இருக்கும்.

சுவாதி

சுவாதி 1ம் பாதம் (தனுசாம்சம்)

தெய்வீக வழிபாடுகள், ஆராச அனுஷ்டானங்கள், பக்தி சிரத்தை, பெரியவர்களிடம், மரியாதை, நற்குண நற்செய்கைகள், பெரியமனித சகவாசம், முதலியவைகளைக் கொண்டிருப்பார்கள், துாங்கும் சமயம் அடிக்கடி கனவுகள் இவர்களுக்கு ஏற்படும்.

சுவாதி 2ம் பாதம் (மகராம்சம்)

திட திரேகத்துடனும், புக்தி விசாலத்துடன் நேர்மையுள்ளவர்களாகவும், யோசனைகளை அதிகம் கொண்டவர்களாகவும், போகங்களை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

சுவாதி 3ம் பாதம் (கும்பாம்சம்)

கலகங்கள் செய்யும் குணங்களுடனும், நல்ல நடத்தைகள் இல்லாதவனாகவும், பயித்தியக்காரகக் குணங்களுடனும் (அசடுகளாகவும்) கெட்ட இருதயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சுவாதி 4ம் பாதம் (மீனாம்சம்)

துர் சகவாச குணங்களுடனும் முன் கோபியாகவும் பிறரை நம்பும் படிப்பேதும் குணங்களுடனும் கொழயவராகவும் காமாந்த காரகர்களாகவும், மற்றவர்கள் குணமறிந்து பழகுபவர்களாகவும் இருப்பார்கள்.


விசாகம்

விசாகம் 1ம் பாதம் (மேசாம்சம்)

கல்வியில் ஊக்கமுள்ளவர்களாகவும், வியாபார நோக்கங்களை அறிந்தவர்களாகவும், ஜோதிஷ சாஸ்திரம் கூறுபவர்களாகவும், நடக்காத காரியங்களைச் சாதிக்க முயற்சிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

விசாகம் 2ம் பாதம் (ரிசபாம்சம்)

தன்னைப் பற்றித் தானே பிரஸ்தாபித்துக் கொள்ளும் குணமும், தந்திரவாதியாகவும், சாஸ்திரங்களைக் கற்பவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.

விசாகம் 3ம் பாதம் (மிதுனாம்சம்)

குள்ளமாகவும், திரேகபலம் கொண்டவர்களாகவும், எல்லா விதங்களையும் புரிந்து கொள்பவர்களாகவும், திருடக் கூடிய குணத்தையும் சண்டைப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.

விசாகம் 4ம் பாதம் (கடகாம்சம்)

செல்வந்தர்களாகவும், திறமைசாலிகளாகவும், பேசுவதில் சாமர்த்தியம் கொண்டவர்களாகவும், ஞானோபதேசம் செய்பவர்களாகவும் தான தருமம் செய்யும் குணம் கொண்டவர்களாகவும், போகத்தைப் பெற்று அழகுடையவர்களாயும் இருப்பார்கள்.

அனுஷம்

அனுஷம் 1ம் பாதம் (சிம்மாம்சம்)

படிப்பில் ஊக்கத்தையும் பல புஸ்தக ஆராய்ச்சிகள் செய்பவர்களாகவும், ஆசார சீலர்களாகவும். வேதம், சாஸ்திரங்களில் பற்றுதல் கொண்டவர்களாகவும் மேன்மையான பதவி அந்தஸ்திலும், உண்மை, நேர்மைகளுடன், வாக்கு நாணயங்களுடன் பந்துமித்ரர்களை ரஷிக்கும் குணங்களுடன் இருப்பார்கள்.

அனுஷம் 2ம் பாதம் (கன்னியாம்சம்)

அரசாங்க கௌவங்களைப் பெறுபவர்களாகவும், மற்றவர்களை அறிந்து நடக்கும் குணங்களுடனும், சங்கீதத்தில் பிரியமும், பெருந்தன்மை விசேஷ நற்குணங்களுடன் இருப்பார்கள்.

அனுஷம் 3ம் பாதம் (துலாம்சம்)

திறமைசாலிகளாகவும், அழகாகவும், தாழ்ந்த குரலில் பேசுபவர்களாகவும், கலைகளில் பற்றுதல் கொண்டவர்களாகவும், சுய சிந்தனையுடனும் ஊர் சஞ்சரிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அனுஷம் 4ம் பாதம் (தேளாம்சம்)

பிறரிடம் பேசுவதற்குள வெட்கப்படுபவர்களாகவும், மற்றவர்களால் புகழையும் பெற்று அதிகமாகப் புத்திர சந்தானங்களில்லாமல் இருப்பார்கள்.

கேட்டை

கேட்டை 1ம் பாதம் (தனுராம்சம்) கலைகளில் தேர்ச்சியும், எழுதுவதில் கீர்த்தியையும் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசும் சுபாவங்களையும், பிற ஸ்திரிகளை நேசிப்பதும், தர்ம குணம் கொண்டவர்களாகவும், தைர்யஸ்தர்களாகவும் இருப்பார்கள்.

கேட்டை 2ம் பாதம் (மகராம்சம்)

முன் கோபக் குணங்களும் குறும்புத்தனம் கொண்டு வியாதி நோய் நிரம்பியும், சங்கீதத்திலும், கலைகளிலும் பிரியம் கொண்டவர்களாகவும், அழகாய் பேசும் திறனுடனும் இருப்பார்கள்.

கேட்டை 3ம் பாதம் (கும்பாம்சம்)

வியாதிகள் உடையவர்களாகவும், தாழ்மையான புத்தியுடன் மாடு ஆடுகளை வளர்ப்பவர்களாகவும், பிறருடைய காரியங்களில் தலையிட்டு, தான்முன் நின்று செய்கிறவர்களாகவும் கலகங்களில் பிரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

கேட்டை 4ம் பாதம் (மீனாம்சம்)

கலகங்களில் குருர புத்தி, சஞ்சனைக் குணம், தாய்வீட்டின் பெருமைகளைக் கூறுபவர்களாகவும், கெட்ட நடத்தைகளைக் கொண்டவர்களாகவும், பிறரை ஏமாற்றும் குணங்களுடன் இருப்பார்கள்.

மூலம்

மூலம் 1ம் பாதம் (மேசாம்சம்)

அற்ப எண்ணங்கள், அற்ப குணங்கள், நன்றியை உடனே மறப்பவனும், பாவ எண்ணங்களைப் பெற்றவர்களாகவும், சோம்பலில்லாமல் சுறுசுறுப்பான குணங்களுடனும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள்.

மூலம் 2ம் பாதம் (ரிசபாம்சம்)

கல்வியில் ஊக்கம் கொண்டவர்களாகவும், பொய் சொல்லும் குணமும், மாந்திரீகம், தெரிந்தவர்களாகவும், இருதய நோயினால் சிரமப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

மூலம் 3ம் பாதம் (மிதுனாம்சம்)

அழகான அங்கலஷணங்களுடன் சோம்பேறிகாளகவும், ஊர் சுற்றுபவர்களாகவும், மாந்தீரிகம், பில்லி, சூன்யம், ஏவல் முதலியன செய்பவர்களாகவும், காமாந்தகாரர்களாகவும், பழங்களைப் புசிப்பதில் ஆசையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

மூலம் 4ம் பாதம் (கடகாம்சம்)

திரேக பலங்களைப் பெற்றவர்களாகவும், சாஸ்திரங்கள் கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், காரியம் சாதிப்பதில் சாமர்த்தியசாலிகளாகவும், சத்ருக்களை வெல்லும் குணங்களுடனும் இருப்பார்கள்.

பூராடம்

பூராடம் 1ம் பாதம் (சிம்மாம்சம்)

நடுத்தர ஆயுள் கொண்டும், கல்வியில் திறமைகளையும், புத்திசாதுர்யங்களையும், நீண்ட கைகளையும், சுக சௌகர்யங்களுடனும், மற்றவர்களால் புகழைப் பெற்றும், பிறருக்கு உபகாரம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

பூராடம் 2ம் பாதம் (கன்னியாம்சம்)

தாழ்மையான புத்திகளையும், பந்து ஜனங்கள், நண்பர்கள் என்ற சமூகத்தினரிடையே வெறுக்கப்பட்டவர்சகளாகவும், கெட்ட நடத்தையும், ஸ்தீரி வர்க்கத்தினரால், வெறுக்கப்பட்டவராகவும் திருடராகவும் இருப்பார்கள் தாயை சிறுவயதிலேயே இழக்கலாம்.

பூராடம் 3ம் பாதம் (துலாம்சம்)

சிறு வயதில் தாயை இழப்பவர்களாகவும் குஷ்டரோக வியாதிபோன்ற நோய்களுடனும், செல்வந்தர்களாகவும், பிடிக்காத குணங்களுடனும் இருப்பார்கள்.

பூராடம் 4ம் பாதம் (தேளாம்சம்)

தைரியஸ்தனாகவும், திடகாத்திர திரேகத்துடனும், வாதிக்கும் குணங்களுடனும், திருடும் அற்ப புத்தகளுடனும், உரத்துக்கத்திப் பேசும் குணங்களுடனும், பலவானாகவும், சுயகாரியப் பிரியனாகவும், பெண் ஜனங்களை வெறுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

உத்திராடம்

உத்திராடம் 1ம் பாதம் (தனுராம்சம்)

கல்வியில் பிரியம், அழகான தோற்றம், சாமர்த்தியம், கலைகளில் பிரியத்துடன் திறமைகளைப் பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் பொறுமை உடையவர்களாகவும், கீர்த்திகளை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

உத்திராடம் 2ம் பாதம் (மகராம்சம்)

கல்வியில் ஊக்கமும், சகல சாஸ்திரங்களும் அறிந்தவர்களாகவும், பிரசங்கம் செய்பவர்களாகவும், தரும சிந்தனை இல்லதவர்களாகவும், ஈகை அற்றவர்களாகவும், பலசாலிகளாகவும் இருப்பார்கள்.

உத்திராடம் 3ம் பாதம் (கும்பாம்சம்)

பிறரிடம் துாஷணையான பேச்சுக்களையும், அகங்காரப் பேச்சுக்களையும், கொண்டவர்களாகவும், கர்வம், கொடுர குணங்களுடனும், கெட்ட எண்ணங்களுடனும், முன் கோபத்துடனும், தன்னைப்பற்றி பிரமாதமாகப் பேசியும் வருவார்கள்.

உத்திராடம் 4ம் பாதம் (மீனாம்சம்)

அழகானத் திரேக தோற்றத்தையும், தைர்யஸ்தராகவும் காரியங்களைச் சாதிபதில் சாமர்த்தியசாலிகளாகவும், வியாபார நோக்கங்களுடனும் பந்துஜன நண்பர்களிடம நல்லவிதமாகப் பேசும், பழகும் குணங்களுடனும், சுறுசுறுப்புள்ள குணங்களுடனும், தனவான்களாகவும் இருப்பார்கள்.


திருவோணம்

திருவோணம் 1ம் பாதம் (மேசாம்சம்)

திட திரேகத்துடன், திறமைசாலிகளாகவும், கர்வம கொண்டவர்களாகவும், தெய்வீக வழிபாடுகளில் பற்றுதல்களுடன் பெரியவர்கள், கல்வி கற்றவர்கள், ஆசிரியரிடத்தில் பக்தி சிரத்தை, மாரியாதை குணங்களுடன் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

திருவோணம் 2ம் பாதம் (ரிசபாம்சம்)

திறமைசாலியாகவும், தனவான்களாகவும், காமகுணம் கொண்டவர்களாகவும், பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் நடப்பவர்களாகவும். பந்துமித்ர, நண்பர்களுடன் வாழ்பவர்களாகவும், சஞ்சாரராகவும், மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.

திருவோணம் 3ம் பாதம் (மதுனாம்சம்)

பொதுக்காரியங்களில் பற்றுதல் கொண்டவர்களாகவும், தயவு தாஷண்யம் இல்லாதவர்களாகவும், சதா சிந்தனைகள், கவலைகள் கொண்டவர்களாகவும், உடல் நோய்களுடனும் செல்வத்துடனும், மற்றவர்களைப் புரிந்துகொண்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.

திருவோணம் 4ம் பாதம் (கடகாம்சம்)

தான தருமக் குணம் கொண்டவர்களாகவும், செல்வம், செல்வாக்குடனும், நிலபுலன், வீடு, மாடு கன்றுகளைக் கொண்டவர்களாகவும் கெட்ட நடத்தை உடையவர்களாகவும், சிறந்த அறிவாளிகளாகவும், உத்தம தியாகிகளாகவும் இருப்பார்கள்.

அவிட்டம்

அவிட்டம் 1ம் பாதம் (சிம்மாம்சம்)

அவசர புத்தியைப் பெற்றவர்களாகவும், காரியங்களை யோசித்துச் செய்யும் குணம் இல்லாதவர்களாகவும், சுக சௌகர்யங்களைக் கொண்டவர்களாகவும், பூமி, வீடு பெற்றவர்களாகவும், செல்வாக்கையும் செல்வத்தையும் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

அவிட்டம் 2ம் பாதம் (கன்னியாம்சம்)

மனைவியின் பேச்சுக்கு மதிப்பைக் கொடுக்கிறவர்களாகவும் அகங்காரம், முன் கோபம் கொண்டவர்களாகவும், சஞ்சலங்களைப் பெற்றவர்களாகவும், ஏழ்மை, எளிமை, அசடுகளாகவும், ஏமாற்றும் குணம் கொண்டவர்களாகவும் நிதானபுத்தியுடனும் இருப்பார்கள்.

அவிட்டம் 3ம் பாதம் (துலாம்சம்)

நெடியர்களாகவும், நீண்டு, உயர்ந்த கம்பீரத் தோற்றத்துடன் அழகாகவும், நீதி நேர்மை உண்மையானவர்களாகவும், அபிமானங்களைக் கொண்டவராகவும், திட மனதுடன், நல்லவர்களாகவும் இருப்பார்கள்.

அவிட்டம் 4ம் பாதம் (தேளாம்சம்)

கோப குணங்களுடன், திரேகத்தில் அடர்ந்த ரோமங்களுடனன், காம குணங்களைக் கொண்டவர்களாகவும், பிறரை ஏமாற்றும் குணமும், கொடிய நோக்கத்துடனும், கர்வம் கொண்டவர்களாகவும், செல்வமும், செல்வாக்கையும் பெற்று இருப்பார்கள்.

சதயம்

சதயம் 1ம் பாதம் (தனுராம்சம்)

அழகான வசீகரத் தோற்றங்களுடன் தான தருமம் செய்யும் குணங்களுடன், மாடுகள் கன்றுகள் பால் பாக்யங்களுடன் விசால நோக்கங்கள் பொறுமையுடன் நல்ல நடத்தையுடனும் அற்ப வருமானங்களைப் பெற்றும் இருப்பார்கள்.

சதயம் 2ம் பாதம் (மகராம்சம்)

கோப குணங்களைப் பெற்றவர்களாகவும், நினைத்த காரியங்களை முடிக்கும் குணம் கொண்டவர்களகவும் நற்குண நற் செய்கைகள் கொண்டும், ஏமாற்றிப் பணம் பறிக்கும் தன்மையையுடையவராயும், தான தருமம் செய்யும் நோக்கம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

சதயம் 3ம் பாதம் (கும்பாம்சம்)

நல்ல குணம், நற்செய்கைகளுடன், பிரபல நோக்கங்களுடன், எண்ணின் காரியங்களைச் செய்து முடிப்பார்களாகவும் முன்கோப குணத்துடனும் இருப்பார்கள்.

சதயம் 4ம் பாதம் (மீனாம்சம்)

எக்காரியத்தையும் நன்கு, தீர யோசிப்பவர்களாகவும், மனதில் கொண்ட காரியங்களை முடிப்பவர்களாகவும், நல்ல திறமைகளைக் கொண்டவர்களாகவும், வேலைகளில் ஊக்கம் கொள்பவர்களாகவும், மற்றவர்களால் புகழையும் கொண்டவர்களாகவும், இருப்பார்கள்.

பூரட்டாதி

பூரட்டாதி 1ம் பாதம் (மேசாம்சம்)

கபட நாடக நடிகா்களாகவும், மற்றவர்களின் நோக்கத்தை அறிந்து அதற்கேற்றவாறு நடித்துக் காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருந்து, சுக, சௌகர்யங்களுடன் வாழ விரும்புவார்கள்.

பூரட்டாதி 2ம் பாதம் (ரிஷபாம்சம்)

மனைவியிடம் ஆசைகள் கொள்பவராகவும், மனைவியிடம் விசுவாசங்களைக் கொண்டவர்களாகவும், மாந்திரிகக் குணமும் பக்தியும், கொண்டவர்களாகவும், அசடு அல்லது பையித்தியக்காரக் குணங்களுடன், பெரிய மனிதர்களின் சகவாசத்துடன், மற்றவர்கள் யாரும் கேவலமாகக் கூறாதபடியும் நடந்து கொள்வார்கள்.

பூரட்டாதி 3ம் பாதம் (மிதுனாம்சம்)

படித்த அறிஞர்களாகவும், கவிகளாகவும் ஆசிரியர்களாகவும், நாகரீகக் குணங்களுடனும், எல்லாருடன் சகஜமாகப் பழகும் குணங்களுடனும், பித்த சம்பந்தமான நோய்களுடனும், மற்றவர்களுடைய வீட்டில் ஆகாரங்களை உண்பதில் பிரியம் கொள்பவர்களாகவும் ஆசைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பூரட்டாதி 4ம் பாதம் (கடகாம்சம்)

பந்து மித்ர நண்பர்களால் நண்பர்களால் போற்றப்படும் குணங்களுடன் அழகிய அங்கலஷணங்களுடன் தொழில் கீர்த்தி பெறுபவர்களாகவும், வாக்கு நாணையங்களைக் கொண்டவர்களாகவும், நீதி நேர்மையுடனும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி 1ம் பாதம் (சிம்மாம்சம்)

ஸ்திரமான நோக்கங்களைக் கொண்டவர்களாகவும், அழகான வாக்கு வன்மைகளுடன், செல்வாக்கு, செல்வத்தைப் பெற்றும், பக்திசிரத்தைகளுடனும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி 2ம் பாதம் (கன்னியாம்சம்)

திறமைசாலிகளாகவும், ஸ்திர புத்தி இல்லாதவர்களாகவும், அழகான ஆடை ஆபரணங்களுடன், அங்கலஷணங்களைக் கொண்டவர்களாகவும், நற்குணங்களுடன், இழிவான நண்பர்களைப் பெற்று சஞ்சலத்துடனும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி 3ம் பாதம் (துலாம்சம்)

தேவாலய, தெய்வீக வழிபாடுகளைப் பெற்றவர்களாகவும், புறம்பேசும், குணங்களுடன், மிருகத் தன்மை பெற்றவர்களாகவும், முன் கோபக்காரர்களாகவும், ரோமங்களைத் திரேகத்தில் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி 4ம் பாதம் (தேளாம்சம்)

பெரிய குடும்பங்களைப் போஷிப்பவர்களாகவும், கல்வியில் சிறந்த கவிஞா்களாகவும், நண்பர்களின் கலக வார்த்தைகளைக் கேட்பவர்களாகவும், விவசாயத் துறையில் வாழ்பவர்களாகவும், தாராள குணங்களுடனும், சஞ்சலங்களுடனும் இருப்பார்கள்.

ரேவதி

ரேவதி 1ம் பாதம் (தனுராம்சம்)

மனைவியிடம் அன்பு கொண்டு அவளுடைய பேச்சிற்கு அதிக மதிப்பை அளிப்பவர்களாகவும், அழகான தோற்றம், மச்சங்களை உடையவர்களாகவும், படித்தவர்களாகவும், சண்டையிடும் குணத்துடனும், எல்லோருடனும் சகஜமாய் பழகுபவர்களாகவும் இருப்பார்கள்.

ரேவதி 2ம் பாதம் (மகராம்சம்)

நீண்ட திரேகத்துடன், தைரியத்துடன், எளிமையான வாழ்க்கையுடனும், கலகங்களில் பிரியம் கொண்டவர்களாகவும், சுயநலக்காரர்களாகவும், தன்னைப் பற்றி மேலாக நினைப்பவர்களாகவும் இருப்பார்கள்.

ரேவதி 3ம் பாதம் (கும்பாம்சம்)

ஏழ்மை, எளிமை வாழ்க்கையுடன் பாவங்களைச் செய்பவர்களாகவும், செல்வமில்லாதவர்களாகவும், நற்குணங்களுடனும் இருப்பார்கள்.

ரேவதி 4ம் பாதம் (மீனாம்சம்)

நீதி, நேர்மை, சத்தியம், சத்ருக்களை வெல்லும் குணம் இவைகளோடு, சுகங்களைப் பெற்று வாழ்க்கையை நடத்துவார்கள்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p7.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License