ஆத்திச்சூடிக்கு இணையாகச் சிலர் புதிய ஆத்திச்சூடிகளை எழுதியிருக்கின்றனர். அவர்களில் கவிஞரேறு வாணிதாசனாரும் ஒருவர். வாணிதாசனாரது புதிய ஆத்திச்சூடியில் இடம் பெற்றிருக்கும் 95 எண்ணிக்கைக்கும் நூலாசிரியர் எளிமையான தெளிவுரையினை இந்நூலில் வழங்கியிருக்கிறார்.
இதே போன்று, புதிய ஆத்திச்சூடியைப் போன்று, வாணிதாசனார் எழுதியிருக்கும் புதிய கொன்றைவேய்ந்தன் 91 எண்ணிக்கைக்கும் நூலாசிரியர் எளிமையான தெளிவுரையினை எழுதியிருக்கிறார்.
இந்த இரு தெளிவுரைகளின் பின்பகுதியில் கவிஞரேறு வாணிதாசனார் எழுதிய “நினைத்துப் பார்க்கிறேன்” எனும் அவரது சிறு வாழ்க்கைக் குறிப்பு, அவரது ஒளிப்படங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
நூலாசிரியர் கவிஞரேறு வாணிதாசனாரது மரபு வழியிலான குடும்பத்தைச் சேர்ந்தவரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.