Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

அமுதன் குறள்


ஆசிரியர் அகரம் அமுதன்
பிரிவு கவிதைத் தொகுப்பு
பக்கங்கள் 80
பதிப்பு 2011
ISBN -----
விலை ரூ.50/-
பதிப்பகம் அமுதன் பதிப்பகம்
முகவரி அகரம் சீகூர் அஞ்சல், பெரம்பலூர் - 621 108.
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9940723625.

புத்தகப் பார்வை:


பதினென் கீழ் கணக்கு நூல்கள், பதினென் மேற்கணக்கு நூல்கள், பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் எல்லாம் படிக்கும் போது, என்னுள் சிலச் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. காரணம் அக்காலச் சூழலில் கடவுளையும் மன்னனையும் பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்டது.

இளங்கோ இம் மரபை உடைத்த மாமனிதன். அவன் மிகப் பெரிய புரட்சியாளன். அவன் முற்போக்குக் கருத்துக்கு முதல் வித்தூன்றியவன். கடவுள் வாழ்த்து பாடாமல் இயற்கை வாழ்த்து பாடும் மனத்திட்பம் அவனிடம் இருந்தது.

அமுதனையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். கடவுள் வாழ்த்து பாடாமல் தலைவணக்கம் பாடுகிறார். அதில் அன்னைத் தமிழுக்கு, தன்னை இந்தத் தரணிக்குத் தந்த தாய் தந்தைக்கு வணக்கம் செய்யும் பாங்கும், மூன்றாவது தன் ஆசான் முருகன் அடியானுக்கு வணக்கம், இளங்கோவை நினைவு படுத்தும் இவரின் இந்த சிந்தனைக்கு என் முதல் வாழ்த்து.

இரண்டடியால் உலகாளலாம் என்பதையும், எளிமையாய்க் கருத்தைப் பரப்பலாம் என்பதையும் அன்று வள்ளுவன் கண்டுணர்ந்து குறள் படைத்தான். இன்று அமுதனுக்கும் அக்கருத்து மேலோங்கியதன் விளைவால் விளைந்த நூலே இந்நூல். வள்ளுவன் முப்பால் வகுத்தான். அமுதன் பால் வகுக்கவில்லை. அதிகாரம் படைக்கவில்லை. தன் எண்ணச் சிறைகளுக்குத் தடையில்லாமல் நெஞ்சில் பட்டதை, நெஞ்சில் தொட்டதைக் குறளாய் 297 குறள்களில் படைத்துள்ளார். அக்காலச் சூழல் வேறு. இக்காலச் சூழல் வேறு. இதனை அமுதன் குறள் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

குழந்தைக்கு நீதி சொல்லும் போது, ‘பெரியவன் ஆனால் உறக்கம் தொலையும் இப்போது உறங்கு’ இது இவரின் உளவியல் சிந்தனைக்கு சரியான சான்று. கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடித்தனம் விரும்பி வாழும் மனோபாவம் நிலவும் சூழலில் அமுதன் ‘பாட்டி கதை கூற பாட்டனார் பண்ணிசைக்கக் கேட்டு விழியுறக்கம் கொள்’ என்பது தமிழனின் கலாச்சார பதிவு.

மூடத்தனத்தின் முகத்திரையைக் கிழிக்கும் குறள் ‘உலகிலே இல்லாத ஓர் பேய்க் கதைக்கும் கலங்காமற் பொய்யெனச் சொல்’. பாசங்கள் வேசங்களாவதற்குப் புட்டிப்பாலும் காரணமாக இருக்கலாம். புட்டிப்பாலின் பிடியில் சிக்கித் தவிக்கும் தாய்மார்களுக்குச் சவுக்கடியாய் குழந்தைக்கு அறிவுரை வழங்கும், ‘அழுதடம் செய்தேனும் தாயின்பால் உண்டு தழை’ என்றும், நிலாச்சொறு உண்பது, தாய்மொழி கல்வியின் சிறப்பு, அம்புலி ஆடுதல், மகிழல், ஆகியவைகளை குழந்தைகளுக்குச் சொல்லும் குறள்கள் சிறப்பு. இதன் வழியாய்த் தொலைந்து போன நம் பதிவுகளை மீட்டெடுத்து நினைவூட்டுகிறார்.

உயிர் இறக்கம் வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. தும்பிக்குத் துன்பந் தரலாமா? என்ற குறள் வள்ளலாரை நினைவூட்டுகிறது.

தன்னம்பிக்கைக்கு, ‘விழுந்தால் விதையாய், விரிந்தால் சிறகாய், எழுந்தால் மரமாய் எழு’ குறள் சரியான சான்று. ஒவ்வொரு மாணவனும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய குறள் இது.

தொலைந்து போன கிராமச் சூழல் அனைத்தையும் தனது குறள் வழியாக மாணவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிராமங்கள் மனிதர்களின் பல்கலைக் கழகங்கள். அது பள்ளி, கல்லூரிகள் கற்றுத் தராத பாடங்களைக் கூடக் கற்றுக் கொடுக்கும். மணல்வீடு கட்டுதல், பட்டம் விடுதல், பம்பரம் விடுதல், குதிரைத் தாண்டுதல், ஆடு புலி, கிட்டிப்புள், சடுகுடு, சிலம்பம், ஏறு தழுவுதல், நடைப் பயிற்சி போன்றவைகளைத் தொலைத்த குழந்தைகள் நிச்சயம் ஏங்கும். மேலும் மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் பதியும் செய்திகளை ‘இரண்டுமுறை பல்துலக்கு, உண்ணும் முன் கைகழுவு நுண்ணுயிரி கையுளதால் பண்ணுமே நோய்கள் பல’, ஐஸ்கிரீம் குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ‘கனிக்கூழ் பருகிக்களி பல் அழிக்கும் பனிக்கூழ் மறக்கப் பழகு’ என்பதிலிருந்து உடல் ஓம்புதலை எளிமையாய் விளக்குகிறார்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை, ‘கொம்பிலையேல் நிற்காதோ ஓர்கொடி, ஈதறிந்து தம்பிநீ தந்தைசொல் கேள்’ என்கிறது அமுதனின் அமுத மொழி. ‘வஞ்சித்தல், சொல்லாடல், வன்முறை, பொய், களவு, நெஞ்சினுள் சேர்க்காதே நீ’ –இது மாணவருக்கு அவசியமான தகுதிகள். அதோடு, ‘கனவுகள் காண்பாய் கனவுகள் வெல்ல நனவில் முனைவாய் நயந்து’ கனவோடு நின்று விட்டால் போதாது அதற்கான உழைப்பைச் செலுத்தினால் உயர முடியும் என்ற கருத்து அப்துல்கலாமை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

அத்தை மாமாவோடு ஒட்டு, உறவுகளைப் பேண் என்பது நம் தமிழன் தனிச்சிறப்பை நினைவூட்டுகிறது.

கல்வியின் சிறப்பை, ‘எண்ணம் திருந்தும், கொடும்மனம் சீராகும், பண்கொண்ட நூலைப் படி’ என்பதிலிருந்து தெரிகிறது. ‘தொன்னூலும், நாலடியும், தூயதமிழ்ப் பாச்சிலம்பும், நன்னூலும், நானூறும் நாடு’ அதேபோல, ‘மூதுரை நன்நெறி முப்பாலை விட்டுவிடின் ஓதுரை வேறேது உரை?’ –அடடா கற்றுத் தெளிய வேண்டிய நூல்களைப் பட்டியலிட்டுள்ளார். இவைகளை பயின்றால் பண்பு மட்டுமல்ல, பாரில் உயரலாம், உச்சம் தொடலாம். அரைவேக்காட்டுத் தனமாய் இருத்தல் கூடாது என்பதை, ‘படிக்காது எழுதும் பழக்கம் ஒழித்துப் படித்தபின் பன்னூல் படை’ – என்பதிலிருந்து தெரிகிறது. அதே சமயம் தாய்மொழி பற்றியும் எழுதுகிறார், ‘தாய்மொழி ஒன்றே தரணி உயிர்க்கெலாம் வாய்மொழி ஆதல் வழக்கு’. அக்காலத்தில் மணிப்பிரவாள நடையைப் போல இக்காலத்தில் இனம்புரியா மொழிக்கலப்பு, நம் மொழியைச் சிதைக்கிறது. பால்போல் உள்ள மொழியில் ஒரு சொட்டு விடம் விடுவது போல் பிறமொழியைக் கலக்கின்றனர் கூசாது. இதனை சாடும் வகையில், ‘பேச்சில் மொழிக்கலப்பைப் பண்ணும் பிழைவிடுவாய் ஏச்சுக்கு இடமாய் விடும்’ என்பதிலிந்து ஒரு சமூகத்திற்கு, மொழிக்கு, நாம் இழைக்கும் அநீதியை சுட்டிக்காட்டும் அமுதனின் மொழி உணர்வு மேம்பட்டதே.

ஆங்கில மோகத்தில் விட்டில் பூச்சிகளாய் ஓடி விழும் மக்களுக்கும் அவர் தம் இளவல்களுக்கும், ‘இளையாய்! தமிழில் எழுத்துப் பிழையைக் களைதல் தமிழர் கடன்’, ‘ஒற்றுப் பிழையொன்றும் தோன்றா உரைசெய்க, கற்றுத் தெளிந்தோரைக் கண்டு’ என்பதுவும், அவரின் மொழிப்பற்றையும், அவர் எம்மொழிக்கும் எதிரானவர் அல்லர் என்பதையும், ‘உன்மொழி கற்றபின் ஓடி உலகலைந்து நன்மொழிகள் கற்பாய் நயந்து’ என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. தாயைப் பிச்சை எடுக்க விட்டுவிட்டு மகன் பலருக்கும் விருந்து வைப்பதற்கு ஒப்பானது என்பதைச் சொல்லாமல் சொல்லும் அமுதாவின் நேர்த்தியே நேர்த்தி. அதேபோல், ‘தொந்தி சரியச் சுமந்தீன்று காத்தாளை நெஞ்சு நிறைய நிறுத்து’ என்ற குறள் தாய்ப் பாசத்திற்கு மகுடம். பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் குறள், ‘ஈன்றோர்க்கு நற்பிள்ளை என்னும் பெயரெடுத்துச் சான்றோனாய் வாழ்தல் தலை’ என்பதாகும்.முயல் ஆமைக் கதை உணர்த்தும் உண்மை முயலாமை என்பதை, ‘முயல் ஆமை போட்டி முயல்தோற்று நிற்க முயலாமை காரணம் முன்பு’ என்ற குறள் மூலம் சொல்லாட்சி செய்திருக்கிறார் அமுதன்.

அடக்கமில்லாரை, ‘நெல்லிடைப் புல்லுக்கு நேர்’ என்பதில் உவமையைக் கையாளும் நேர்த்தி வெளிப்படுகிறது.

இக்காலச் சூழலுக்கேற்ப, ‘துணையாகிக் காக்கும் தொழிற்கல்வி போலே இணையாகிக் காப்பது எது?’ தொழில் நுட்ப யுகத்திற்கு ஏற்ப நம்மைத் தயார் செய்யும் வேலையைச் செய்யச் சொல்லும் இவரே அடுத்த குறளில், ‘புதுக்கும் செயலைப் புரிவாய் மரபை ஒதுக்கும் செயலை ஒழி’ என்கிறார். மரபை மறந்தவனுக்கு மன்னிப்பில்லை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வாழ்க்கை ஏற்றம் இறக்கம் கொண்டது என்பதனை, ‘கைவிரல்கள் ஆயினும் காண அளவினில் ஐவிரல்கள் ஒத்திரா தாம்’ என்றுரைப்பது வாழ்க்கைத் தத்துவத்தின் வார்ப்பு. நீரின்றியமையாது உலகு என்று நீர்மேலான்மையை வள்ளுவன் வகுத்தான். அமுதனோ, ‘மழைநீரைச் சேமித்து மண்ணுலகைக் காக்க விழை, நீரை ஆக்காதே வீண்’ என்றும், ‘சிக்கனமாய் நீரைச் செலவுசெய், நாளைய மக்களுக்கும் மீதத்தை வை’ என்றுரைப்பதன் மூலம் காலச் சூழலை மனதில் நிறுத்தி தொலைநோக்கோடு சமூகத்திற்கு வழிகாட்டும் வழிகாட்டியாய் இருக்கிறார் அமுதன்.

பகுத்தறிவுச் சிந்தனைக்குச் சான்றாய் அமைந்த குறள், ‘அன்னம்போல் நல்லதையே ஆய்ந்து பிரித்தேற்பாய், எண்ணம்போல் வாழ்தல் இழுக்கு’. மது மட்டும் தீங்கல்ல புகைப்பழக்கமும் தீங்கு என்பதை, ‘பஞ்சிருந்து காப்பினும் பற்றவைத்த வெண்சுருளால் நெஞ்சிருளில் தோயும் நினை’. இன்றைய சூழலில் இளம் சமூகத்தை சீரழிக்கும் சிகரெட்டையும் அது ஏற்படுத்தும் விளைவையும் சுட்டியுள்ளது அவரது சமூக அக்கரையைக் காட்டுகிறது.

அமுதனின் சொல் சிலம்பத்திற்கு சான்று பகரும் குறள், ‘தீதெனக் கண்டுமத் தீதினைச் செய்தல்போல் தீதில்லை மற்றுமோர் தீது’ இக்குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணியில் அமைக்கப்பட்டுள்ளது. அணிநயம் கூட இவருக்கு ஆழகாய் வந்து இருக்கை அமைக்கிறது.

எப்பொருளை யார் சொன்னாலும் தப்பெனில் தப்பென்று சொல்லுதற்கு ஆண்மை வேண்டும். இதனை, ‘உப்பினைக் கற்கண்டென்று ஊர்கூடி ஓதிடினும் தப்பென அஞ்சாது சாற்று’ என்பதன் மூலம் வெளிப்படுகிறது.

திரை ஊடகம் சமூகத்தை திசை மாற்றிடும் ஊடகமாய் மாறிப்போனது வருத்தம்தான். அதனை, ‘ஆடை குறைத்துடலைக் காட்டும் திரைப்படத்தை தேடிப்போய் காண்பதா?, ‘சின்னத் திரைத் தொடர்கள் சீரழிக்கும் உன்னறிவை உன்னி விலகு’ என்பதில் அவரின் சமூக அக்கரை நமக்கு தெரிகிறது. செய்தியை பரிமாறும் சாதனமாய் வந்த தொலைபேசி இன்று தொல்லை பேசியானது சோகத்திலும் சோகம். இதனை, ‘குறுகத் தறித்த குறள்போல் உரைசெய் செறிந்த அலைப் பேசியைச் சேர்ந்து’.

உலகோடு ஒட்ட ஒழுக வழிகாட்டுகிறார். ‘கணினி மயமான காலமிதில் நீயும் கணித்தமிழ் கற்றல் கடன்’ என்றும், ‘இணையத்துள் நாளும் இனிமையைத் தேடி உனையதனுள் வீழ்த்தாதே’ என்ற குறள்களின் வழி.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவரின் குறளின் அருமையை. நீங்களும் வாசிக்க வேண்டும். அதன் சுவையை நுகர்ந்து ரசிக்க வேண்டும் என்பது என் பேரவா. வள்ளுவன் வாழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் வள்ளுவனையோ, குறளையோ தவிர்க்க முடியாது இந்த சமூகம்.

அதே போல் அகரம் அமுதனின் குறளும் காலத்தைக் கடந்து நிற்கும், இக்காலச் சூழலை எதிர்காலத்திற்கு ஆவனமாய்க் காட்டும். 1330 குறள்கள் படைத்தான் வள்ளுவன். 297 குறள்கள் படைத்துள்ளார் அமுதன். படைப்புகளின் நோக்கும் சமகாலத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பதிவு செய்யும் கருவியாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதனை அமுதன் அழகாய்ச் செய்துள்ளார். வள்ளுவனையும் தொட்டுச் சென்றுள்ளார். வள்ளுவன் தொடாத பகுதியையும் விட்டு விடாமல் பதித்துள்ளார்.

கால வெள்ளத்தில் அடித்தோடும் நூரையல்ல அமுதன். ஆழ்கடலில் சங்கமிக்கும் நீர். சங்கமித்தலோடு நின்று விடாமல், மீண்டும் மேகம் தொட்டு மழையாய் மண்ணை நனைக்கும் பேராற்றல் பெற்றவர். அவரின் புகழ் உயரட்டும். படைப்புகள் பெருகட்டும். வெண்பாப் புலியின் கவி வேட்டை தொடரட்டும்.

- பூமலை. மணிவண்ணன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p79.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License