Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

செப்பேடு


ஆசிரியர் புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்
பிரிவு மரபுக் கவிதை
பக்கங்கள் 176
பதிப்பு ஏப்ரல்’ 2016
ISBN -----
விலை ரூ.150/-
பதிப்பகம் வசந்தா பதிப்பகம்
முகவரி 2-16. ஆர்.கே. இல்லம்,முதல் தெரு, புதிய வசந்த நகர், ஒசூர் - 635 109.
தொலைபேசி எண் 04344 245350
அலைபேசி எண் 9443458550.

புத்தகப் பார்வை:


தமிழ்க் கவிதையின் தொடக்கம் மரபுக் கவிதையே. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மரபின் ஆதிக்கம் தொடர்ந்தது. பாரதிக்குப் பின் மாற்றம் ஏற்பட்டது. மரபைப் பின் தள்ளி புதுக்கவிதை முன் சென்றது. மரபுக் கவிதை என்றாலே ஒரு சிலர் மட்டுமே எழுதி ஒரு சிலர் மட்டுமே வாசிக்கும் நிலையில் மரபுக் கவிதை இருந்ததை மாற்றி அனைவரும் வாசிக்கும் வண்ணம் மரபுக் கவிதையை எழுதி வருபவர்கள் பாவலர் கருமலைத்தமிழாழன் போன்ற ஒரு சிலரே. இவர் நெஞ்சின் நிழல்கள் தொடங்கி, கல்லெழுத்து வரை 21 கவிதை நூல்களை வெளியிட்டவர். தற்போது 22 ஆம் கவிதை நூலாக “செப்பேடு” தந்துள்ளார்.

மரபுக்கும் தமிழுக்கும் எப்போதும் ஒரு தொடர்புண்டு. பாவலரும் தமிழ்ப் பற்று மிக்கவர். அவர் கவிதையின் பாடுபொருள்கள் எதுவாக இருந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பு வெளிப்படும். தமிழ் மொழியின் சிறப்பைக் கவிதைகள் மூலம் உணர்த்தியுள்ளார். எல்லாம் கொடுக்கும் தமிழ், உவமை இல்லாத் தமிழ் என்னும் இரண்டு கவிதைகளில் கவிஞர் தமிழ்ப்பற்றையும் தமிழ் மொழியின் பெருமையையும் எடுத்துரைத்துள்ளார். இரண்டாவதில் தெள்ளு தமிழ்க்குறளைத் தேசிய நூல் ஆக்கியே வள்ளுவரைப் போற்றிடுவோம் வா எனத் திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். உலகப் பொதுமறை என்று காலம் காலமாகப் போற்றப்பட்டு வரும் திருக்குறளைத் தேசிய நூலாக்கப் பலரும் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் பாவலரும் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுட்டு விரல் கவிதையில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தை நாடும் தமிழர்களைச் சாடியுள்ளார். நம்மொழியை நாமறிவோம் என்றதுடன் வீழ்ந்ததேன் தமிழன் என்றும் ஒரு கவிதையில் விளக்கம் தந்துள்ளார்.

முடமாகித் தமிழரின்று வீழ்ந்த தெல்லாம்
முத்தமிழில் கல்விகல்லாக் கீழ்மை யாலே

என்று தமிழில் கல்வி கற்காததே காரணம் என உறுதிபடக் கூறுகிறார்.இன்றைய தமிழன் நிலையை ஒரு கவிதையிலே இவ்வாறு காட்டியுள்ளார்.

பக்கத்து நாட்டினிலே தொப்புள் கொடிகள்
படுகொலையில் சாவதினைப் பார்த்த வாறு
திக்கெல்லாம் தூற்றிடவே மொழியி னத்தின்
திகழ்வீர உணர்வின்றி உள்ளார் இங்கே

இலங்கையில் தமிழர்களை இரக்கமின்றிக் கொன்று குவித்ததைக் கண்டும் கொதிக்காமல் இருக்கும் தமிழர்களைக் குற்றம் சாட்டியுள்ளார். சக தமிழர் என்றால் அன்பு காட்ட வேண்டும் என்கிறார். அக்கறை காட்ட வேண்டும் என்கிறார். தமிழர் என்று கூறிக் கொண்டாலும் மொழி வாரியாக, சாதி வாரியாக பிரிந்து கிடக்கின்றார். ஒரே இனம் என்றாலும் இன உணர்வு ஒரே மாதரி இருப்பதில்லை. இன உணர்வில் வேறு வேறாய் தமிழர்கள் இருப்பதால் சொந்த மண்ணில் அன்னியனானாய் என்று எச்சரித்துள்ளார்.

பட்டிமன்றம் ஒருகாலத்தில் மக்களைச் சிந்திக்கச் செய்தது. பட்டிமன்றத்திலும் பயனுள்ள கருத்துகள் பேசப்பட்டன. ஆனால் இன்று பட்டிமன்றங்கள் நகைச்சுவைகளை மட்டும் வெளிப்படுத்தும் மன்றங்களாகி விட்டன. தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் மக்களை மழுங்கடிக்கச் செய்கின்றன. சந்ததியைக் கெடுக்கவே தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன என்பதைத் தெரிவித்துள்ளார். பாழாய்ப்போன பட்டிமன்றம் என்று சாடியுள்ளார்.

நாட்டில் கல்வி என்பது அரசின் பிடியிலிருந்து கை நழுவிப் போய்விட்டது. அரசு பள்ளிகள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களோ கல்வியை முதலீடாக்கிப் பணம் ஈட்டி வருகின்றன. கல்வியை அரசே நடத்த வேண்டும் என்பது அறிஞர்கள், கவிஞர்கள் பலரின் கோரிக்கை. கல்வி அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், ஏழைகளும் கற்க வேண்டும் என்னும் நோக்கத்தில்

இட்டகல்வி பொதுவாக்கித் தனியார் பள்ளி
இல்லாமல் செய்வதுவே இதற்குத் தீர்வு

என்கிறார். அதுவும் இது ஒன்றே தீர்வு எனக் கல்வியைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்கிறார்.சிற்றிதழ்கள் இலக்கியத்தின் ஒரு வகைமை எனினும் இலக்கியத்தை வளர்த்து எடுப்பது சிற்றிதழ்களே ஆகும். சிற்றிதழ்கள் இல்லையெனில் இலக்கியம் செம்மையுறாது என்றே சொல்லலாம். பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களும் சிற்றிதழ்களில் எழுதி வருபவர் ஆவார். அவரின் படைப்புகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்தவை, இன்றும் வெளியாகி வருகின்றன. கவிஞரும் சீரிதழ்களே சிற்றிதழ்கள் என்று போற்றியுள்ளார். சிற்றிதழ்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். சிற்றிதழ்களையும் பட்டியலிட்டுள்ளார்.

மனிதர்கள் கூட்டாகக் குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி இன்று தனித்தனியே வாழவே விரும்புகின்றனர். வாழும் சூழலே ஏற்பட்டுள்ளது. அடுக்ககங்கள் என்றாலும் அடுத்தவர் முகம் பார்ப்பதே அரிது. பேசுவது அரிதிலும் அரிது. முன்பெல்லாம் வீட்டில் தொலைபேசி இருக்கும் போது அனைவரும் ஓரிடத்தில் கூடி நின்று பேசினர். அலைபேசி வந்த பிறகு தனித்தனியே பேசுகின்றனர். மக்கள் தனிமையானார் என்று அத்தகையோர்களைச் சாடியுள்ளார். அகநூலும் முகம் கெடுக்கும் என்றும் ஒரு கவிதையில் விமர்சித்துள்ளார்.

வீரத்தால் விளைந்த ஊர் இராணிப்பேட்டை என்னும் தலைப்பிலான கவிதையில் ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். தேசிங்கு அரசனைப் பெருமைபடுத்தியுள்ளார். வரலாறு குறித்துப் பேசிய கவிஞர் வரலாறு நீ படைக்க வேண்டும் என்றும் பாடியுள்ளார்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு போதை இருக்கும். அதிகார போதை, மத போதை, சாதி போதை, புகழ் போதை, பண போதை எனப் பல போதைகள். அரசியல் போதையும் உண்டு. எல்லாப் போதைகளிலும் அழிவுண்டு. இவை எல்லாவற்றையும் விட அழிவு தரும் போதை மது போதை. மது போதையால் நாடே அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பாதையே மாறிக் கொண்டிருக்கிறது. போதை நாடு ஆகி விட்டது என்று வருந்தியுள்ளார்.

நித்தமிங்கே அழிக்கின்ற மதுவின் போதை
நிறைந்திருக்கும் போதைநாடாய் ஆன தின்று

எனப் பாவலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தலைமுறையைச் சீரழித்தார் என்றும் ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னுமிந்த விடமதுவை ஒழிக்கா விட்டால்
இந்தநாடு சுடுகாடாய் மாறிப் போகும்

என்று சாபமிட்டு மது ஒழிப்பு அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஊருக்கு ஒரு கோயில் இருந்தது ஒரு காலம். பெரியார் அதையும் மறுத்தார், வேண்டாம் என்றார். இன்று தெருவுக்குப் பல கோயில்கள் என்றாகி விட்டது. கட்சித் தலைவரானார் கடவுள் என்னும் கவிதையில் குட்டிக் கோயில்கள் பல பெருகியதைச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரியாரின் சொற்களிலேயே எல்லோராலும் குறிப்பிடுவது வெங்காயம். வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால், அந்த வெங்காயத்தை வரிக்கு வரி கவிதையாக்கியுள்ளார். வெங்காயம் என்பது வெறுங்காயம் இல்லை என்கிறார்.தமிழின் முதல் புதுக்கவிஞன் பாரதி, நிலம் பார்த்த பெண்ணை நிலா பார்க்கச் செய்தான். அவரின் தாசனும் பெண் விடுதலையைப் பேசினான். பெரியாரும் பெண்ணியத்தை முன் வைத்தார். பெண்ணியம் பேசுவதைக் கவிஞர்கள் பெருமையாகக் கருதினர். பாவலரும் பெண்ணின் பெருமை பேசித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டார். எனினும் பெண்ணுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

மரபுக் கவிதை எழுதுவோருக்குப் பொறுப்புகள் மிக அதிகம். இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும். இலக்கியமாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலைக்கு ஏற்பவும் இருக்க வேண்டும், புரியும் படியும் இருக்க வேண்டும். பொருள் செறிந்ததாகவும் இருக்க வேண்டும். பாவலர் கருமலைத்தமிழாழன் கவிதையில் அத்தனையும் இருக்கிறது. பாடல்கள் அனைத்துமே அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன. சமூக வளர்ச்சியை முன்வைக்கின்றன. மனித முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கின்றன. சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவைகளைத் தகர்க்க முயன்றுள்ளன. அவர் கவிதைகளில் சொல்லாததுதும் இல்லை. பொல்லாததும் இல்லை. இல்லாததும் இல்லை. மக்கள் முன்னேற்றம் மட்டும் இல்லாமல் மொழி மேம்பாட்டிற்கும் வழியமைத்துள்ளார். மொழி பாவலருக்கு நன்றாகவே வசப்பட்டுள்ளது. சுவைஞர்களையும் வசீகரித்துள்ளது. இலக்கணத்திற்குட்பட்டு இருந்தாலும் எளிமையாக இருப்பது ஒரு சிறப்பம்சம். வடிவத்திற்குட்பட்டு இருந்தாலும் வாசிப்பிற்குத் தடையில்லாமல் இருப்பது மற்றொரு சிறப்பம்சம். பழமையும் உண்டு. புதுமையும் உண்டு. மரபு பழமையானது பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் மரபின் புதுமையாளராக, புரட்சியாளராக விளங்குகிறார்.

ஆக்கத்தை இனத்திற்கும் தமிழ்மொ ழிக்கும்
அளிக்கின்ற செயல்களினை நாளு மாற்றி
சாக்காட்டை வென்றிட்ட சான்றோர் போன்று
சாதித்து வரலாற்றில் நிலைத்து நிற்போம்

என்று பாவலர் எழுதியுள்ள வரிகள் பொதுவானது எனினும் அவருக்கும் பொருத்தமாக உள்ளது. அவரும் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்பதற்கு அடிப்படையாக, ஆதாரமாக விளங்குகிறது செப்பேடு..

- கவிஞர் பொன் குமார், சேலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p83.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License