ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிலிப்பு என்பவர்.
ஒருநாள் அவரது சட்டைப்பையிலிருந்த பணத்தை எவரோ திருடிவிட்டனர்.
நண்பர்கள் அந்த இழப்பைக் குறித்து அவரிடம் துக்கம் விசாரித்தனர்.
அப்பொழுது பிலிப்பு, "நான் திருடவில்லை; நான் திருடப்பட்டேன். அதற்காக முதலாவது ஆண்டவரை வணங்குகிறேன். இரண்டாவது, அவன் கண்ணியமான திருடன். ஏனெனில், என்னை அடித்து உதைக்காமல் எனக்கேத் தெரியாமல் திருடிவிட்டான். மூன்றாவதாக, அவன் என் சட்டைப்பையிலிருந்த பணத்தைத்தான் எடுத்தான். என் வீட்டில் இருந்த பணத்தையோ, என் வங்கிக் கணக்கிலோ அவன் திருடவில்லை. ஆண்டவருக்கு நன்றி” என்றார்.
பிலிப்பின் இந்தக் கண்ணோட்டம் நமக்கு ஒரு பாடம் தருகிறது. அது என்ன?
இழந்ததை எண்ணிக் கவலைப்படாமல், இருப்பதை வைத்துக் துணிவுடனும் இறைநம்பிக்கையுடனும் செயல்படுவது நல்லது.