இந்தியாவில் விடுதலைப் போர் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பொதுக்க்கூட்டங்கள் போட்டு தலைவர்கள் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது தூத்துக்குடியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அதில் வ.உ.சிதம்பரனார் அவர்களும் கலந்து கொண்டார்.
முதலில் ஒரு தொண்டர் மிக ஆக்ரோசமாக பேசத் துவங்கினார். பேச்சின் இடையில் "வெள்ளைக்காரர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உடனே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்றார்.
இதைக் கேட்டதும் மேடையில் அமர்ந்திருந்த வ.உ.சி எழுந்தார். மைக்கின் அருகில் வந்து மூட்டை முடிச்சுகள் நம்முடையவை. வெள்ளையர்கள் வெறுங்கையுடன்தான் வெளியேற வேண்டும்" என்றார்.
கூட்டத்தினர் இதைக் கேட்டு பலத்த ஆரவாரத்துடன் கை தட்டினார்கள். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஒவ்வொரு பேச்சிலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்று அறிந்து வியக்க வேண்டியிருக்கிறது.