வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.
பெரிய கூட்டம்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த நாத்திகர் ஒருவர் எழுந்து, "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனைக் கடவுள்கள்?" என்ற வினாவினை எழுப்பினார்.
அவர்களுக்கு இடையிலான உரையாடல் தொடங்கியது.
வாரியார், "உங்களது முதன்மையான உணவு எது? அதாவது அரிசியா, கோதுமையா?" என்று கேட்டார்.
"அரிசி"
"அரிசியில் என்னென்ன உணவுகளைச் செய்யலாம்?"
"சாதம், பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி என்று இப்படி எத்தனையோச் சொல்லிக் கொண்டேப் போகலாம், இதை ஏன் கேட்கிரீர்கள்?”
"இல்லை, அரிசியை ஊற வைத்து தின்று விட்டுப் போகலாமே, அதை ஏன், மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து, தாங்கள் சொன்ன உணவௌ வகைகளையெல்லாம் செய்ய வேண்டும்? என்பதற்காகக் கேட்டேன்”
"அதெப்படி சாமி, வெறும் அரிசியை ஊற வைத்துத் தின்பது..? நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
"நம் உணவுக்கான மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அரிசியை எப்படியெல்லாம் செய்து சாப்பிடுவது என்று நம் சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, அது போலத்தான் இறைவன் ஒருவனே.. இந்து சமயத்தில் ஆன்மிக ருசிக்காக இறைவனை அவரவர் விரும்பியபடி, பல உருவங்களில் உருவாக்கி வணங்கி மகிழ்கிறார்கள், மன அமைதி பெறுகிறார்கள்"
கேள்வி கேட்ட நாத்திகர், மேடையேறி வாரியாரை வணங்கி, அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார்..