ஒரு சமயம் காங்கிரஸ் பேரியக்கத்தோடு தொடர்புடைய ஒரு பட அதிபரின் படத் தொடக்க விழாவிற்குப் பெருந்தலைவர் காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார்.
படப்பிடிப்பைத் தொடங்கிவைத்து பெருந்தலைவர் பேசும்போது 'எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும், தயாரிப்பாளருக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால் நான் இவ்விழாவிற்கு வந்திருக்கிறேன்.
என்னை கைராசிக்காரன், அது, இது என்றெல்லாம் இங்கேப் புகழ்ந்து பேசினார்கள். கைராசியை நான் நம்புகிறவன் இல்லை, உழைப்பை மட்டுமே நம்புகிறவன்.
என்னைப் படத் தொடக்க விழாவிற்கு கூப்பிட்டதும் படத்துக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அதற்கு பார்த்தால் பசி தீரும்-னு சொன்னாங்க. அதெப்படி பார்த்தால் பசிதீரும்? கார்லே வரும் போது கூட அதைப் பற்றித்தான் யோசனை பண்ணிக்கிட்டு வந்தேன்.
இங்கே எல்லோரும் பேசின போதுதான் எனக்கு விவரம் புரிஞ்சது. நீங்க எல்லாம் படாதபாடுபட்டு எடுக்கிறப் படத்தை ஏரளாமான மக்கள் பார்த்தாங்கன்னா உங்களோட பசி தீரும் அப்படித்தானே...” என்று சொல்ல, கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.