“என்னுடைய ஏழாவது வயதில் என் தந்தையார் புகையிலை விற்றுக் கொண்டிருந்த கடைத்திண்ணையில் மருதமுத்துக் கோனார் என்ற பெரியவர் ஒருவர் ஆற்று மணலைக் கொட்டி அதில் அ-ஆ என எழுதச் செய்து கற்றுக் கொடுத்தார்.
சில திங்கள்களில் (மாதங்களில்) எழுத்துக் கூட்டிப் படிக்கவும் கற்றுக் கொண்டேன். ஒன்பதாம் வயதில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி முதலிய நூல்களைப் படித்தேன்.
10 வது வயதில் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில் வேலை பார்த்தேன். நாள் ஒன்றுக்கு சம்பளம் அரையணா. இது எங்களின் பெரிய குடும்பத்தின் மோர்ச் செலவை ஈடு செய்தது.
ஓய்வு நேரங்களில் என் தந்தையார் எனக்குக் கடைக் கணக்கு எழுதும் வரவு செலவு முறைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார்.
சிறுவயதிலேயே நாம் கற்றுக் கொள்ளும் பல செயலக்ள் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கும்” என்றார் கி. ஆ. பெ. விசுவநாதம்