ஒரு முறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களைக் காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தார்.
அந்த நேரம் பார்த்து, அவர் வெளியேப் போயிருந்தார்.
சிறிது நேரம் காத்திருந்து கடுப்பாகிப் போன அவர், வீட்டு வாசல் சுவரில் கழுதை என்று எழுதி வைத்துச் சென்றார்.
வந்தவர் யார்? என்பதை எழுத்தை வைத்து அடையாளம் கண்டு கொண்டார் ஆபிரஹாம் லிங்கன்.
அடுத்த நாள் அவரைச் சந்தித்து, “நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்திருந்தீர்கள் போல, நல்ல வேளையாக, சுவரில் உங்கள் பெயரை நீங்கள் எழுதி வைத்திருந்ததால், யார் வந்தது? என்பதை அறிய ரொம்ப வசதியாக இருந்தது” என்றார்.
அவர் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே...!