பிரபல அறிவியலாளர் டார்வின் விலங்குகளைப் பற்றி ஆராய்ந்தவர்.
ஒரு சமயம், சில குறும்பான சிறுவர்கள் நீல வண்டு ஒன்றைப் பிடித்து அதன் இறகுகளைப் பிய்த்துவிட்டு, அதற்குப் பதிலாக, வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளையும், இன்னும் வெட்டுக்கிளி, கருவண்டு ஆகியவற்றின் உறுப்புகளையும் அதோடு ஒட்டிக் கொண்டு வந்து டார்வினிடம், “இதோ பார்த்தீர்களா? புது வகையான பூச்சி” என்று காண்பித்தனர்.
டார்வின் அதை வாங்கி நன்றாகப் பார்த்த பின் “இதைக் கொல்வதற்கு முன்னால், இது ரீங்காரம் செய்ததா? இல்லையா?” என்று கேட்டார்.
"ஆமாம்” என்றனர் சிறுவர்கள்.
"பலே இதுதான் அசல் ஹம்பக்" என்றார் டார்வின்.
ஆங்கிலத்தில் ஹம் என்றால் ரீங்காரம் என்றும் பக்' என்றால் பூச்சி என்றும் பொருள்.
ஆனால், 'ஹம்பக்' என்று இரண்டையும் சேர்த்து ஒரே சொல்லாகச் சொன்னால் "முழுப்பொய்" என்று பொருள்.
ஏமாற்றப் பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்.