உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்' என்ற இதழைத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன்.
அந்த இதழுக்கு ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், செய்தியாளர், வெளியிடுபவர், விற்பனையாளர் என்று அனைத்தும் அவரே...
அச்சடிக்கும் எந்திரத்தைத் தொடருந்துக்குள்ளேயே வைத்து அச்சடித்து ஒரு இதழின் விலை 3 செண்ட் வீதம் விற்றார்.
மாதக் கட்டணம் 8 செண்ட் என 300 சந்தாதாரர்களையும் சேர்த்து விட்டார்.
ஒரு சில எழுத்துப் பிழைகள் தவிர, இதழ் மிக நன்றாக இருப்பதாக லண்டன் டைம்ஸ் இதழ் பாராட்டியது.
உலக வரலாற்றிலேயே தொடருந்தில் அச்சடிக்கப்பட்ட முதல் இதழ் அதுதான். மேலும், 15 வயதுச் சிறுவன் இதழாசிரியராக இருந்து வெளியிட்ட இதழும் அதுதான்.