மிகவும் திறமையான, புத்திசாலி வக்கீல் லாயிட் ஜார்ஜ். ஒரு விசாரணையின்போது நீதிபதி லேசான தூக்கத்தில் இருந்தார்.
ஜார்ஜுக்குக் கோபம். சுற்று முற்றும் பார்த்தார்.
கோர்ட் டவாலிகூட மெல்லக்கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தான்.
சட்டென்று ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்து டவாலியை நோக்கிப் போட, ‘டமால்’ என்று சத்தம் வர, நீதிபதி கோபமாக ‘என்ன அது?’ என்றார்.
“கனம் நீதிபதி அவர்களே! மன்னிக்கவும். நான் உயிரைக் கொடுத்து வாதம் புரிகிறேன். இந்த டவாலி தன்னையும் நீதிபதி என எண்ணித் தூங்கிக் கொண்டிருந்தான்’’ என்றதும் நீதிபதி அசடு வழிந்தார்.