உமையாள்புரம் சிவராமனை, சங்கீத அன்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்தார்.
சாப்பாடு தரையில்தான். மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்த உமையாள்புரம் சிவராமன் நின்று கொண்டே இருந்தார்.
அவர் நிற்கக் காரணம், உணவு வகைகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்த சங்கீத அன்பர் மறந்து போய் தரை சாப்பாட்டுக்கு முக்கியமான ஒரு பொருளை ஏற்பாடு செய்யாததுதான்.
ஏன் நிற்கிறீர்கள்? என்று தயங்கியவாறு சிவராமனைக் கேட்டார் அவர்.
''மேசைச் சாப்பாடு என்றால் சாப்பிட எனக்கு இரு கை போதும். தரைச் சாப்பாடு என்றால் இரு கை போதாது பல'கை' வேண்டும்'' என்றார் சிவராமன்.