ஆப்ரகாம் லிங்கன் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார்.
அவர் ஒரு முறை வழக்கம் போல் தம்முடைய பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்தார்.
அவரைப் பார்ப்பதற்காக ஒரு பாதிரியார் காத்திருந்தார்.
பாதிரியாரைக் கண்டதும் லிங்கன், “எனக்கு வேண்டிய சக்தி, பிரார்த்தனையில் கிடைத்துவிட்ட நிம்மதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது'' என்றார்.
“எதற்காகப் பிரார்த்தனை? கடவுளை எதிரியின் பக்கம் செல்லாமல் நம் பக்கத்திற்கு இழுப்பதற்குத்தானே பிரார்த்தனை செய்தீர்கள்?'' என்று கேட்டார் பாதிரியார்.
“கடவுள் என் பக்கம், எதிரியின் பக்கம் என்ற கருத்துக்கே, இடமில்லை. நாம் கடவுளின் பக்கம் இருக்க வேண்டும், அதற்குத்தான் பிரார்த்தனை'' என்றார் ஆப்ரகாம் லிங்கன்.