சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆங்கில இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
14 வயதான அவரது பேரன் அவரிடம், "எங்கள் வகுப்பில் 'Churchill's History of the English Speaking Peoples' என்னும் புத்தகத்தைப் படிக்கிறோம். நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதப் போகிறேன்” என்றான்.
அதைக் கேட்ட சர்ச்சில் அவனிடம், "சர்ச்சில் உனது கடிதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவார்” என்றார்.
பேரன் சட்டென்று, "அது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா. இனி மேலும் அது போன்ற புத்தகங்கள் எழுத வேண்டாமென்றுதான் நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன்” என்று கூறினான்.