சிங்கப்பூரில் ஒரு ராணுவ முகாம். அங்கே இருந்த சாப்பாட்டு அறையில் ஒரு சைனாக்காரர் விருந்தினர்களுக்கு உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.
அவர் பரிமாறிவிட்டுச் செல்கையில் அந்த விருந்தினர்கள் அவருடைய வழுக்கைத் தலையைக் குறி வைத்து ரொட்டித் துண்டுகளை எறிவார்கள்.
அவர் அதைப் பொருட்படுத்தாமல் எப்போதும்போல் பொறுமையுடன் தன் பணியை மட்டும் செய்து வந்தார்.
அவர்கள் இவர் மேல் இரக்கம் கொண்டு ''இனிமேல் நாங்கள் உங்கள் வழுக்கைத் தலைமேல் ரொட்டித் துண்டுகளை விட்டெறியமாட்டோம்'' என்று சொன்னார்கள்.
அந்த சைனாக்காரரும், ''நல்லது ஐயா நானும் நாளையிலிருந்து உங்கள் காபியில் (சாக்கடை) தண்ணீரைக் கலக்க மாட்டேன்'' என்று பணிவுடன் கூறினார்.