ஒரு முறை கிருபானந்த வாரியார் கோவில் ஒன்றில் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது ஏராளமானபேர் அவரது பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதில் இளைஞர்களும் அடங்குவர். அவர்களில் சிலர் மதில் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தனர்.
இதைக் கவனித்த வாரியார், தனது வலது கரத்தால் அவர்களை சுட்டி காண்பித்தபடி, "இவர்கள் எல்லாம் வள்ளுவர் சொன்ன நிற்க அதற்கு தக என்பதை கடைப்பிடிப்பவர்கள்" என்றார்.
அவர் இப்படி சொன்ன மாத்திரத்தில், நின்று கொண்டிருந்த இளைஞர்கள் அத்தனை பேரும் சட்டென்று அமர்ந்து விட்டனர்.
கூட்டத்தினர் அப்போது எழுப்பிய சிரிப்பலைக்கும் குறைச்சல் இல்லை.