கிரேக்க நாட்டில் புகழ் பெற்ற தத்துவ ஞானிகளுள் ஒருவர் டயோஜனஸ்.
ஒரு சமயம் அவர் நகர வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே ஓரிடத்தில் கூட்டம் கூடியிருந்தது. கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
என்ன நடக்கிறது என்று கூட்டத்தின் அருகே சென்று பார்த்தார்.
சிறுவன் ஒருவனைப் பெரியவர்கள் சிலர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
"ஏன் இந்தச் சிறுவனை அடிக்கிறீர்கள்?" என்று கூட்டத்திலிருந்த ஒருவரைக் கேட்டார் அவர்
"அந்தப் பையன் அசிங்கமாகப் பேசுகிறான். காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதனால்தான் எல்லோரும் சேர்ந்து அவனை அடிக்கிறார்கள்" என்று பதில் வந்தது.
"எதற்காக இந்தச் சிறுவனை அடிக்கிறீர்கள்? இவன் தந்தையை அழைத்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்கம் கற்றுத் தராத தந்தைதான் தண்டனைக்கு உரியவன்" என்றார் அவர்.
என்ன சரிதானே?