அமெரிக்க ஜனாதிபதியிடம் வேலை செய்யவில்லை!
பேராசிரியர் கால்பிரெத் என்பவர் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர் ஒரு முறை பல்கலைக்கழகத்தில் நீண்ட உரையாற்றினார். அதனால் களைப்படைந்து ஓய்வு எடுக்க விரும்பினார்.
அவர் தனது பெண் உதவியாளரிடம், “யாரும் என்னைத் தொந்தரவு செய்ய அனுமதிக்க வேண்டாம்.” என்று கூறி தன் ஓய்வு அறைக்குச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் தொலைபேசி மணி அழைத்தது.
அதை எடுத்த உதவியாளர், “பேராசிரியர் தூங்குகிறார்” என்று கூறினார்.
மறுமுனையில், “நான் அமெரிக்க ஜனாதிபதி வின்ஸ்டன் ஜான்சன் பேசுகிறேன்” என்று அதிகார தொனியில் குரல் ஒலித்தது.
இதைக் கேட்ட உதவியாளர் சற்றும் பதற்றப்படாமல், “நான் பேராசிரியர் கால்பிரெய்த்திடம் வேலை செய்கிறேன். அமெரிக்க ஜனாதிபதியிடம் வேலை செய்யவில்லை. இப்போதி அவரைத் தொந்தரவு செய்ய இயலாது” என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார்.
அவரது துணிச்சலையும், விசுவாசத்தையும் அறிந்த அமெரிக்க ஜனாதிபதி பெரிதும் வியந்து போனார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.