மேடைப் பேச்சு வராத ரைட் சகோதரர்கள்
விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு மேடைப்பேச்சு வராது.
அவர்கள் கண்டுபிடித்த விமானத்தைப் பற்றி விளக்க ஒரு கூட்டம் நடைபெற்றது. விஞ்ஞானிகளும் அறிஞர்களும் கூடியிருந்தார்கள்.
முதலில் பேச வந்த ஆல்பர், “தம்பி வில்பர் இது குறித்து விளக்கமாகப் பேசுவார்.” என்று கூறிவிட்டு அமர்ந்து விட்டார்.
அடுத்து வில்பர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.
வில்பர், “நான் பேச வேண்டியதை அண்ணன் ஆல்பர் பேசி விட்டார். எனவே விடை பெறுகிறேன்” என்றபடி அமர்ந்து விட்டார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.