இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ஆ.ப. ஜே. அப்துல்கலாம் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது அவர் அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
தென்னாப்பிரிக்க மாணவர்களில் ஒருவர், “கடவுள் இருக்கிறாரா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
அப்துல்கலாம் கேள்வி கேட்ட மாணவனிடம், “பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எவ்வளவு நேரமாகிறது?” என்று கேட்டார்.
“24 மணி நேரம்” என்று பதிலளித்தார் அந்த மாணவர்.
“சூரியனைச் சுற்றி வர பூமிக்கு எவ்வளவு காலமாகிறது?”
“365 நாட்கள்”
“சரி. சூரியன் நாமிருக்கும் பால்வீதியைச் சுற்றி வர எவ்வளவு காலமாகிறது?”
மாணவனிடமிருந்து பதிலில்லை.
உடனே கலாம், “சூரியன் பால்வீதியைச் சுற்றி வர 2.15 கோடி ஆண்டுகள் ஆகும்.ஒரு பால்வீதியைச் சுற்றி வரவே இவ்வளவு காலம் என்றால் இதே போல் கோடிக்கணக்கான பால்வீதிகள் உள்ளன. இவையனைத்தும் அண்டத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கில், குறிப்பிட்ட தூரத்தில், குறிப்பிட்ட காலத்தில் துல்லிதமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை உருவாக்கியவர் யார்?” என்றார்.
மாணவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.
பின்னர் அப்துல்கலாம் சொன்னார்.
“சூரியன் நம் கண்ணுக்குத் தெரியும் சக்தி. கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருப்பது கடவுள் என்ற சக்திதான் என்று நான் நம்புகிறேன்”
மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.