அமெரிக்காவின் நகைச்சுவை அரசர் என்று போற்றப் பெற்ற மார்க் ட்வைன் என்பவர் ஒரு சமயம் சொற்பொழிவாற்றுவதற்காக ஓர் ஊருக்குச் சென்றிருந்தார்.
சொற்பொழிவு செய்வதற்கு முன்பாக தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக முடி திருத்தகம் ஒன்றுக்குச் சென்றார். முடி திருத்தம் செய்பவருக்கு இவர் யாரென்று தெரியாது.
“தாங்கள் வெளியூர் போலிருக்கிறது.இன்று மார்க் ட்வைன் சொற்பொழிவு நடக்கப் போகிறது. தாங்கள் அதற்குப் போகிறீர்களா? அதற்கு நுழைவுச் சீட்டெல்லாம் வாங்கி விட்டீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு மார்க் ட்வைன், “ஆமாம், நானும் போக வேண்டும். ஆனால், நான் நுழைவுச் சீட்டெல்லாம் வாங்கவில்லை.” என்றார்.
“அப்படியானால், நீங்கள் நிற்கத்தான் வேண்டியிருக்கும்” என்றார் அந்த முடி திருத்தும் தொழிலாளி.
“ஆமாம், மார்க் டவைன் சொற்பொழிவு கேட்கும் பொழுதெல்லாம் நான் நிற்கத்தான் நேரிடுகிறது” என்றார் ட்வைன்.