கஹரால்டு என்ற மேல்நாட்டுக்காரர் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகவாதி.
அவர் தன் வீடு முழுவதும் “GOD IS No WHERE" (கடவுள் எங்கும் இல்லை) என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.
அவருடைய கடைசிக் காலத்தின் தன் நம்பிக்கையையும், தத்துவத்தையும் தன் பேரனின் வாயிலேயே கேட்க விரும்பிய அவர் தன் எட்டு வயதுப் பேரனை அழைத்தார்.
அவர் வீடு முழுவதும் எழுதி வைத்துள்ள வாசகத்தை வாசிக்கச் சொன்னார்.
அந்தச் சிறுவன் அதை, “GOD IS NOW HERE" (கடவுள் இங்கேயும் இருக்கிறார்) என்று ஆங்கிலத்தில் பிரித்து வாசித்தான்.
தனது வாசகத்திற்குள்ளேயே கடவுள் இருப்பதை பேரன் தனக்கு உணர்த்தி விட்டானே என்று எண்ணிய அவர் தன் கொள்கையிலிருந்து மாறினார்.