விலை உயர்ந்த பொருள்?
உலகின் மிகப்பெரிய தத்துவஞானி எனப் போற்றப்பட்ட ரஸ்ஸல் பெர்னாட் வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய்நாடு திரும்பினார். அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.
“உங்களிடம் இருக்கக் கூடிய விலைமதிப்பேறிய பொருட்கள் என்ன? அதையெல்லாம் வெளியே எடுத்துக் காட்டி விடுங்கள்.” என்று கண்டிப்பான குரலில் கூறினர் விமான நிலைய அதிகாரிகள்.
ரஸ்ஸல் அமைதியாக, “என்னிடம் விலைஉயர்ந்த பொருள் ஒன்று மட்டும்தான் உள்ளது. அதை வெளியில் எடுக்கவோ, உங்களிடம் காட்டவோ முடியாது” என்றார்.
அதிகாரிகளுக்கு கோபம் வந்தது.
“நீங்கள் எடுத்துக் காண்பிக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்ய நேரிடும். அப்பொழுது மிகவும் வருத்தப்படுவீர்கள்” என்று எச்சரித்தனர்.
மறுபடியும் ரஸ்ஸல் அதே புன்னகையுடன், “என்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் என்னுடைய அறிவுதான். அதைத் தாங்கள் எப்படி பறிமுதல் செய்ய முடியும்?” என்று கேட்டார்.
அப்போது அங்கு வந்த சிலர், “இவர் நம்நாட்டு தத்துவஞானி ரஸ்ஸல் பெர்னாட்” என்றனர்.
உடனே விமான நிலைய அதிகாரிகள், “அய்யா, எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் போகலாம்” என்று அவரை வழியனுப்பி வைத்தனர்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.