படிக்காதவனுக்கு மாலையா...?
காமராஜர் ஒரு முறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்.
அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தனர்.
வந்திருந்தவர்களில் ஒரு ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்தார்.
அந்த ஆசிரியரைப் பார்த்த காமராஜர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார்.
இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.