எல்லாம் இறைவன் செயல்!
கணித மேதை இராமானுஜம் சென்னையில் தங்கியிருந்த போது மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டியில் பயணம் செய்வார்.
ஒரு சமயம் அவர் தமது நண்பர்களிடம், “இந்த டிராம் வண்டியின் ஓட்டுநர் தன்னால்தான் வண்டி ஓடுவதாக நினைக்கிறார். உண்மையில் டிராம் வண்டிகள் மேலே உள்ள மின்சாரக் கம்பிகளின் வழியாக வரும் மின்னாற்றலால்தான் ஓடுகின்றன என்பதை ஓட்டுநர் மறந்து விடுகிறார். அதுபோலத்தான் மனிதர்களில் அதிகமானவர்கள் மின்சாரக் கம்பியிலுள்ள மின் சக்தியைப் போன்ற இறைசக்தியை மறந்து விட்டு தங்களுடைய செயல்களுக்குத் தாங்களே காரணம் என நினைத்துக் கர்வம் கொள்கின்றனர். உண்மையில் எல்லாம் இறைவன் செயல். மற்றவைகளெல்லாம் மாயை!” என்றார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.