படியில்லை என்று சொல்லலாமா?
ஒருநாள் இரவு, தமிழ்ப் பேரறிஞர் ந.மு.வேங்கடசாமி நாடார், தமிழ்ப் பெரும் புலவரான பண்டிதமணி கதிரேசன் செட்டியாரை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்.
கதிரேசன் செட்டியார் மிகவும் கவனமாக நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில் படிகள் இருக்குமோ என்று பயந்து நடந்து வந்தார்.
அப்போது நாடார் "படியில்லை படியில்லை" என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
உடனே பண்டிதமணி, "இறைவனின் திருச்சந்நிதியில் வந்து, படியில்லை, படியில்லை என்று சொல்லாதீர்கள். இறைவன்தான் எல்லோருக்கும் படி அளப்பவர்" என்றார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.