அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கனை ஒரு முறை ரசியத் தூதுவர் சந்தித்தார்.
அப்போது லிங்கன், “நண்பரே, நான் இந்த அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இல்லாமலிருந்தால் என்னை நீங்கள் எப்படி மதிப்பீர்கள்?” என்று கேட்டார்.
வேடிக்கையாகப் பேசுவதில் வல்லவரான அந்த ரசியத் தூதுவர், “உங்களைக் கம்பமாக மதிப்பேன்” என்றார்.
ஆபிரகாம் லிங்கனின் குச்சி போன்ற ஒல்லியான உடல் தோற்றத்தைக் கண்டு அவர் நகைச்சுவையாகச் சொன்னார்.
இதற்காக ஆபிரகாம் லிங்கன் சிறிதும் வருத்தப்படவில்லை.
ஆபிரகாம் லிங்கன் ரசியத் தூதுவரைப் பார்த்து, “அதாவது, உங்கள் நாட்டுத் தேசியக் கொடி பறக்கும் உங்கள் வணக்கத்துக்குரிய கொடிக்கம்பமாக மதிப்பீர்கள் அப்படித்தானே...” என்றார்.
ரசியத் தூதரும் ஆபிரகாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி “ஆமாம்” என்றார்.