அன்னை தெரசாவின் வேண்டுகோள்!
அன்னை தெரசா அவர்களுக்கு உலகப் புகழ் பெற்ற ‘நோபல் பரிசு’ 1979 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்தப் பரிசினைப் பெறுவதற்காக அன்னை தெரசா சுவீடன் நாட்டிற்குச் சென்றார்.
நோபல் பரிசு பெறுபவர்களுக்கு ஆடம்பர விருந்து அளித்துப் பாராட்டிப் பரிசு வழங்குவது வழக்கம்.
இதையறிந்த அன்னை தெரசா பரிசுக் குழுவினரிடம் சென்றார். “இவ்வளவு பெருந்தொகை செலவழித்து ஏன் விருந்து வைக்க வேண்டும்? அந்தத் தொகையினை என்னிடம் வழங்கினால் அதைக் கொண்டு மேலும் பல ஏழைகளுக்குப் பசி போக்கிட உதவ முடியும்” என்றார் அன்னை தெரசா.
அன்னை தெரசாவின் பேச்சு விழாக் குழுவினரை நெகிழ வைத்து விட்டது.
அவரது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விருந்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் அன்னை தெரசாவிடமே வழங்கினர்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.