ஹெலன் கெல்லர் அறிவுரை!

ஹெலன் கெல்லர் என்பவர் பிறவியிலேயே காது கேளாதவராகவும், பேசமுடியாதவராகவும், பார்வையற்றவராகவும் பல துன்பங்களுடன் பிறந்தவர். ஆனால், இவர் உலகிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கெல்லாம் ஒளிவிளக்காகத் திகழ்கிறார்.
அவருடைய எண்ணங்கள் ஆழமாகவும், அருமையாகவும் இருந்தன.
“பார்வையற்ற நான், பார்வையும் பிற திறன்களுடைய அனைவருக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன்...
நீங்கள் காண்பதையெல்லாம் கண்ணாரக் காணுங்கள். நாளையே உங்கள் கண் பார்க்கும் சக்தியை இழந்து விட்டால்...? என்று எண்ணிப் பார்த்துப் பார்ப்பதை எல்லாம் நன்றாக ரசித்துப் பாருங்கள். மற்ற உறுப்புகளையும் அப்படியேஎ பாருங்கள்...
பறவையின் பாடலைக் குரலின் இனிமையை, இசக் கருவிகளை மீட்டுவதால் எழும் இனிய நாதத்தைக் காதாரக் கேளுங்கள். நாளையே கேட்க முடியாமல் போனால் என்ன செய்வது என்கிற எண்ணத்துடன் உங்கள் காதுகளைப் பயன்படுத்துங்கள்...
நாளையே தொடும் உணர்வைக் கைகள் இழந்து விடக் கூடும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு பொருளையும் தொடுங்கள். பூக்களின் நறுமணத்தை நுகரும் போதும், ஒவ்வொரு வேளை உணவை உண்ணும் போதும், நாளையே நுகரும் சக்தியும், சுவையுணர்வும் இல்லாமல் போய் விடக் கூடும் என்ற எண்ணத்தோடு செயல்படுங்கள்”
அவருடைய கருத்து உண்மைதானே...?
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.