படிப்பு படிக்க வேண்டாமா...?
ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளி கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிந்து வந்தார்.
அவரைச் சந்தித்த பக்தர் ஒருவர் அவரிடம், “ஐயா... நீங்கள் காளியைப் பார்த்து இருக்கிறீர்களா...?” கேட்டார்.
உடனே ராமகிருஷ்ணர், “பார்த்திருக்கிறேன்... இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டு இருந்தேன்... “ என்றார்.
அந்த பக்தர், “நீங்கள் சொல்வது உண்மையானால் அவளை எனக்காக வரவழையுங்கள்... பார்க்கலாம்” என்றார்.
ராமகிருஷ்ணர், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ?” என்று கேட்டார்.
அவர், “நான் மருத்துவராக இருக்கிறேன்...” என்றார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், “அப்படியானால் என்னையும் இப்போதே மருத்துவர் ஆக்குங்கள்...” என்றார்.
அவர், “அதெப்படி... அதற்கான படிப்பு படிக்க வேண்டாமா...?” என்று கேட்டார்.
“அதே போல தான்... காளியைக் காணவும் பக்தி என்ற படிப்பு வேண்டும்...” என்றார் ராமகிருஷ்ணர்.
- கணேஷ் அரவிந்த்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.