மார்க்ட்வைன் உதவாக்கரையா?
மார்க்ட்வைன் ஆரம்ப காலத்தில் பத்திரிகை ஒன்றில் ஆறுமாத காலம் பணியாற்றினார். ஒருநாள், ஆசிரியர் அவரை அழைத்துச் சொன்னார்;
“நீ ஒரு உதவாக்கரை, சோம்பேறி, இனி நீ வேலைக்கு வரவேண்டாம்”
உடனே மார்க்ட்வைன், “நீங்கள் ஒரு மகா மடையர்” என்றார்.
இதைக் கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.
அடுத்து ட்வைன், “நான் ஒரு உதவாக்கரை என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆறு மாத காலமாகியிருக்கிறது. இது, எனக்கு எப்போதோ தெரியும்” என்றார்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.