வயதான காலத்தில் உழைப்பு அவசியமா...?

அமெரிக்காவின் மிகப்பெரும் பணக்காரரான அவர் முதுமையிலும் கடும் உழைப்பை மேற்கொண்டிருந்தார்.
நாளுக்கு ஒரு நாடு என்று பயணம் செய்யும் அவர் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்த போது, பக்கத்துக்கு இருக்கையில் இருந்த இளைஞர் அவரை வியப்புடன் பார்த்தார். பயணத்தின் போது கூட பணி செய்து கொண்டே இருந்தார்.
உடனே அந்த இளைஞர் அவரிடம், “அய்யா, நீங்கள் அதிகமான சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள். இனியும், இந்த வயதான காலத்தில் உழைக்க வேண்டுமா? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெரியவர், “தம்பி, இந்த விமானத்தை விமானி நல்ல உயரத்தில் பறக்க வைத்திருக்கிறார். சிரமப்பட்டு மேலே ஏறியதால் இப்போது சுலபமாக பறக்கிறது இல்லையா. அதான் விமானம் மேலே ஏறி விட்டது என்று விமானி என்ஜினை நிறுத்தி விட்டால், மிகப்பெரும் விபத்து ஏற்பட்டு விடாதா? அதைப் போலத்தான் வாழ்க்கையும் நாம் கடுமையாக உழைத்து மேலே வந்து விட்டு, நாம் தான் மேலே வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்தி விட்டால் நம் வாழ்கையும் பெரிய விபத்துக்குள்ளாகிவிடும். உழைப்பு வருவாயை அதிகரிப்பதுடன், நமது உடல் நலத்தையும், மன மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்” என்றார்.
யார் அந்த மிகப்பெரும் பணக்காரர் என்று தானே கேட்கிறீர்கள், அவர்தான் அமெரிக்காவின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த ராக்பெல்லர்.
- கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.