டாக்டர் அம்பேத்கர் ஒருநாள் தனது நண்பர் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒருவன் கரடி ஒன்றை வைத்துக் கொண்டு, அதன் முடி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்து கொண்டிருந்தால் பணக்காரராகிவிடலாம் என்று கரடியின் முடியை விற்று கொண்டிருந்தான்.
கரடியின் முடியை வாங்கக் கூட்டம் அலை மோதியது.
அம்பேத்கரின் நண்பரும் முடியை வாங்கச் சென்றார்.
அவரைத் தடுத்து நிறுத்திய அம்பேத்கர், "நீ அந்த முடியை வாங்கினால் என்ன ஆவாய்?" என்றார்.
நண்பர், "நானும் பணக்காரனாக ஆவேன்" என்றார்.
உடன் அம்பேத்கர், ”நீ கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரன் ஆவாய். சரி, நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த வியாபாரி அந்தக் கரடியையே வைத்திருக்கின்றானே... அவன் ஏன் பணக்காரன் ஆகாமல் இப்படித் தெருவில் அதன் முடியை விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கின்றான்?" என்று கேட்டார்.
அப்போதுதான் நண்பரும் தான் அப்படி நினைத்தது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தார்.
நாம், ஒருவர் சொல்வதைக் கேட்டு, அதைப் பற்றிச் சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் செயல்படக் கூடாது. நம் அறிவைப் பயன்படுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.