அன்னை தெரசா பசியோடு வந்த ஒரு ஏழைத்தாய்க்கு மூன்று ரொட்டித் துண்டுகளை வழங்கினார்.
நன்கு பசித்தவருக்கு உணவு வழங்கினால் அதனை உடனே உண்ணவே ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த ரொட்டித்துண்டுகளைப் பெற்ற தாயோ வேகம் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓட நினைத்தார்.
அவரை ஓடவிடாமல் தடுத்த தெரசா, "சாப்பிடாமல் எங்கே போறீங்க?" என்று கேட்டார்.
அதற்கு அந்த தாய், "அம்மா! நான் இரண்டு நாட்களாகத்தான் பட்டினியாக இருக்கிறேன். ஆனால், என் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் தன்னுடைய குழந்தைகளோடு சேர்ந்து மூன்று நாளாகப் பட்டினியாகக் கிடக்கிறாங்க. எனவே இதனை அவர்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அதனால்தான் ஓட முயன்றேன்" என்றார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தெரசா, "அம்மா! கருணையிலும் சேவையிலும் என்னை மிஞ்சி விட்டீர்கள்" என்று கண்ணீர் மல்கப் பாராட்டினார்.