ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலம்...
யூதரான ஹெலன் கெல்லரும், அவரது குடும்பத்தாரும் தூக்கிலிட வேண்டிய நேரம்... அதற்கு உத்தரவு தர வேண்டிய அதிகாரி வந்து கையெழுத்து போட்டால் அடுத்த நிமிடம் தூக்குத் தண்டனை என்ற நிலை...
அந்த அதிகாரி வந்து சேர்ந்ததும் அவர் ஹெலன் கெல்லரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார். பின்னர், அந்த அதிகாரி ஹெலன் கெல்லரைக் குடும்பத்தோடு வேறு நாட்டுக்குத் தப்பியோடச் செய்தார்.
ஏன் தெரியுமா?
அந்த அதிகாரி தினமும் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்குச் சிறைச்சாலைக்கு செல்வார். அந்த நேரத்திலெல்லாம் கெல்லர் அமைதியாக அந்தச் சிறை அதிகாரியைப் பார்த்து புன்னகை செய்வாராம்.
ஆனால் அந்த அதிகாரி ஒருநாளும் திருப்பிப் புன்னகை செய்ய மாட்டாராம். அன்று ஏனோ, அந்த அதிகாரியின் மனதில் மாற்றம் ஏற்பட அந்த புன்னகைதான் காரணமானது.
''எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்...? என்பதை புரிந்து கொண்ட கெல்லர், சாவதற்குத் தயாராகிவிட்ட நிலையில், வாழ்கின்ற காலத்தை ஏன் சோகமாக்கிட வேண்டும் என்ற தெளிவு ஹெலனிடம் இருந்தது. இந்த நேர்மறையான எண்ணத்தின் வெளிப்பாடுதான் அவரது புன்னகை.
அந்த புன்னகையின் விலைதான் அவரது விடுதலை...
உங்களின் புன்னகை, மற்றவர்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் உறவை, மேலும,வலுப்படுத்த செய்யும் மிகச் சிறந்த ஆயுதம்.
தேவையான இடங்களில், உங்கள் புன்னகையைத் தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றிடுங்கள்...!