ஒரு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சர்ச்சிலும், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.
ராதாகிருஷ்ணன் கையைச் சுத்தமாகக் கழுவி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார்.
சர்ச்சில் கரண்டி, முள் கரண்டி ஆகியவற்றை உபயோகித்துச் சாப்பிட ஆரம்பித்தார்.
ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைப் பார்த்த சர்ச்சில், ''என்ன இது, கரண்டியை உபயோகித்துச் சாப்பிடுங்க. அதுதான் சுகாதாரமானது'' என்றார்.
உடனே ராதாகிருஷ்ணன், ''இல்லை, கைதான் ரொம்ப சுகாதாரமானது''என்றார்.
உடனே சர்ச்சில், “அது எப்படி?” என்று கேட்க, நமது ஜனாதிபதி சொன்னார்.
“கைதான் சுகாதாரமானது. ஏனென்றால், அதை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாது. மேலும், எனது கை சுத்தமாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். உங்களால் உங்கள் கரண்டி சுத்தமாக இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?”
சர்ச்சில் பதில் சொல்ல முடியாது திகைத்து நின்றார்.