டாக்டர் தாமஸ் கூப்பர் என்பவர் முதலாம் எலிசபெத் மகாராணி காலத்தில் பெரும் ஆங்கில அகராதியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
முன்னர் இருந்த அகராதியில் மேலும் 33,000 சொற்களைச் சேர்க்க அவர் எண்ணினார்.
இதற்காக அவர் எட்டு ஆண்டுக் காலம் கஷ்டப்பட்டுச் சேர்த்த 33,000 சொற்களைக் காகிதங்களில் எழுதி வைத்தார்.
அவரது மனைவியோ எழுத்து வாசனை தெரியாதவர், கொடுமையின் சின்னம். அவர் வெளியேப் போயிருந்த நேரத்தில், அவரது நூலத்திற்குள் சென்று அத்தனைக் காகிதங்களையும் குவித்து நெருப்பு வைத்துவிட்டாள்.
அந்த முட்டாள் பெண்மணி, தன் கணவர் படித்துப்படித்துப் பாழாய்ப் போய்விடுவாரோ என்று பயந்தாள்.
அவர் திரும்பிவந்து பார்த்தபோது அவருக்குப் புரிந்துவிட்டது.
எனினும், “மனைவியிடம் யார் செய்த வேலை இது?” என்று கேட்டார்.
“ஏன்? நான்தான் செய்தேன்!” என்றாள் துணிச்சலாக.
அவர் சொன்னார், “ஓ தீனா, எனக்குப் பெரும் தொல்லை செய்துவிட்டாயே” என்று சொல்லி வருந்தினார்.
பின்னர் மீண்டும் எட்டு ஆண்டுகளுக்கு மேஜையில் உட்கார்ந்து பொறுமையாக எழுதி அகராதிப் பணியை முடித்தார்.
பொறுமையின் சின்னம் தாமஸ் கூப்பர் என்றால் மிகையாகாது.