உலகப் போர் நடந்த போது ஹிட்லர் ஒரு சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
தன்னுடைய விசுவாசிகளான ஐம்பது ராணுவ அதிகாரிகளை அழைத்து இங்கிலாந்தைத் தாக்குவது எப்படி? என்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஒரு தும்மல் சப்தம். வரைபடத்தில் கவனமாயிருந்த சர்வாதிகாரி, உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்.
“யார் இங்கே தும்மியது...?”
ஆழ்ந்த மௌனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் பத்து பேரைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!
மீண்டும் மௌனம்...
முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்கக் காவல் படையான “கெஸ்டபோ” அமைப்பினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.
பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை.
மறுபடியும் ஹிட்லர் கேட்டார்.
“இப்போதாவது சொல்கிறீர்களா...? அல்லது மேலும் பத்து பேரை சுட்டுக் கொல்ல அனுப்பட்டுமா...?”
மீண்டும் பேரமைதி.
மீண்டும் வெடிச் சத்தம்.
மீண்டும் ஹிட்லர் கேட்க, ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்.
“மன்னியுங்கள் ஜெனரல்… நான் தான் தும்மினேன்…”
ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாகக் குலுக்கிவிட்டுச் சொன்னார்.
“நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொறுத்தவரை ராசியான சகுனங்கள்…!”